அரசியலுக்கு ரெடியானார் சுள்ளான் தனுஷ்.. தந்தை கஸ்தூரி ராஜா பேச்சு.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இரண்டு முறை தேசிய விருதையும் வென்றிருக்கும் அவர் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். கடைசியாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்த கர ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சூழல் இப்படி இருக்க அவரது தந்தை கஸ்தூரி சமீபத்தில் பேசுகையில், 'தன்னுடைய மகன் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்' என கூறியிருந்தார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷ் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தரமான கமர்ஷியல் ஹிட் கிடைத்து பல வருடங்கள் ஆகின்றன. அவர் இயக்கத்தில் வந்த இட்லி கடை மட்டும்தான் ஓரளவுக்கு தப்பியது. கடைசியாக அவர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் நடித்திருந்தார். போர்த்தொழில் இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் என்பதால்; இந்தப் படத்தை ரொம்பவே நம்பியிருந்தார் தனுஷ். ஆனால் படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

Blue Sattai Maran Trolls Dhanush After Kasthuri Raja s Political Remark Tweet Goes Viral
Photo Credit:

அடுத்த படம்: இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 55வது படத்தில் நடித்துவருகிறார். இதில் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை மெகா ஹிட்டாக்கி கொடுத்தது போல்; இந்தப் படத்தையும் அதே ரேஞ்சில் வசூல் செய்ய வைப்பார் இயக்குநர் என ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். அத்தனையையும் தாண்டி இன்டஸ்ட்ரியில் தன்னை டாப் 3 டயர் ஹீரோக்களில் ஒருவராக தக்க வைக்க அவசியம் ஒரு வெற்றி இப்போது ஹீரோவுக்கு தேவைப்படுகிறது. அது இதில் நடக்கும் என நம்பலாம்.

Also Read
கோபாலபுரம்தான் பவர்ஃபுல்.. அடித்து ஆடும் தனுஷ் தந்தை.. ஊருக்கே விஜய் தளபதி.. அவருக்கு இளைய தளபதிதான்
கோபாலபுரம்தான் பவர்ஃபுல்.. அடித்து ஆடும் தனுஷ் தந்தை.. ஊருக்கே விஜய் தளபதி.. அவருக்கு இளைய தளபதிதான்

கஸ்தூரி ராஜா பேச்சு: இப்படிப்பட்ட சூழலில் இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய அவர், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ, பேரன்களோகூட அரசியலுக்கு வரலாம். சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம்தான். கலைஞர் வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம்" என தெரிவித்திருந்தார். இதனையடுத்து தனுஷின் பெயரை சுற்றி அரசியல் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

ப்ளூ சட்டை மாறன் கிண்டல்: இந்நிலையில் கஸ்தூரி ராஜாவின் பேச்சை பகிர்ந்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், "சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி, சட்டை, ருத்திராட்சை கொட்டை, ப்ரோமோ மேடைகளில் பூமர் தத்துவங்கள், அனுதாபம் தேடும் சென்ட்டிமென்ட் கதைகள் என அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான். இப்போது விஜய் வென்றதால் அடுத்து மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என நம்புகிறார்" என ட்வீட் செய்திருக்கிறார். அந்த ட்வீட் பெரிய வைரலாக தொடங்கியிருக்கிறது.

தனுஷின் பேச்சு: முன்னதாக, படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும்போது தனுஷ் தத்துவார்த்தமாக பேசுவதையே வழக்கமாக்கினார். முக்கியமாக ரஜினியின் பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட விஷயங்களையும் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவரை சிலர் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தார்கள். ஆனால் அதையெல்லாம் தனுஷ் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X