Blue Sattai Maran: ஒரே ட்வீட்.. கேப்டன் மில்லர் சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்.. என்ன ஆச்சு?
சென்னை: குற்றாலத்துக்கு போய் விட்டு குழாய் தண்ணியில குளிச்சது போலத்தான் கேப்டன் மில்லர் படம் இருந்தது என தனது விமர்சனத்தில் தரமான சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன் கேப்டன் மில்லர் வெற்றிக் கொண்டாட்டத்தை பார்த்தும் பொறுக்க முடியாமல் போட்டுள்ள ட்வீட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பொங்கல் பண்டிகை போட்டியில் முதல் நாளில் அருண் விஜய், விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை தனுஷ் தனது ரசிகர் படையின் துணை கொண்டு முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். அந்த சந்தோஷத்தை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேப்டன் மில்லர் விமர்சனம்: தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், இளங்கோ குமரவேல், ஜெய பிரகாஷ், அதிதி பாலன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி வருகின்றனர். இன்னொரு பக்கம் விமர்சகர்கள் இந்த படத்தின் மேக்கிங் எல்லாம் நல்லா இருந்தாலும் படம் சுமார் தான் என நெத்தி பொட்டிலேயே சுட்டு விட்டனர்.
முதல் நாளிலேயே வெற்றி கொண்டாட்டம்: சத்யஜோதி தயாரிப்பில் கேப்டன் மில்லர் வெளியான நிலையில், அதன் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் முதல் நாள் மாலையே படத்தின் ரிசல்ட் தெரிந்து நடிகர் தனுஷை நேரில் சந்தித்து பெரிய மாலையை எடுத்து அவருக்கு போட்டு அழகு பார்த்த புகைப்படம் வெளியாகி தனுஷ் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: இந்நிலையில், அந்த செய்தியை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல “ரிலீஸான அன்றே சக்ஸஸ் மீட்.” என ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார். முன்னதாக தனுஷின் நானே வருவேன் படத்திற்கும் இதே போல கலைப்புலி எஸ். தாணு முதல் நாளிலேயே வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டாடி இருந்தார். இந்நிலையில், முதல் நாளிலேயே சக்சஸ் மீட் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்தது டிரெண்டாகி வருகிறது.
கேப்டன் மில்லர் தான் வின்னர்: ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழ் அப்போ படம் அவ்வளவு தான் ஃபிளாப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் போட்டு வரும் நிலையில், இந்த பொங்கல் வின்னர் தனுஷ் தான். கேப்டன் மில்லர் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புது என ப்ளூ சட்டை மாறனை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











