கேப்டன் மில்லர் தனுஷ் கேப்டன் விஜயகாந்தை மறந்துட்டாரே.. போட்டுத் தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: கேப்டன் என உடைந்த இதயத்தின் எமோஜியை மட்டுமே நடிகர் தனுஷ் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். நியூ இயர் கொண்டாட்டத்தில் இருந்த தனுஷ் வந்ததும் விஜயகாந்துக்கு அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவுமே செய்யாமல் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என ப்ளூ சட்டை மாறன் போட்டுத் தாக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விஜயகாந்த் பல ஆண்டுகள் பல சாதனைகளை படைத்துள்ளார். தான் உண்டு தன் படம் உண்டு என்றெல்லாம் இருந்தது கிடையாது. நடிகர் சங்கம் தலைவராக மாறிய விஜயகாந்த் பல நடிகர்களுக்கும் தனிப்பட்ட முறையில் உதவி செய்துள்ளார். தனுஷ் குடும்பத்துக்கும் விஜயகாந்த் பேருதவி செய்துள்ளார்.

Blue Sattai Maran trolls Dhanush for forgetting Captain Vijayakanth

தனுஷ் குடும்பத்துக்கு விஜயகாந்த் செய்த உதவி: கஸ்தூரி ராஜாவின் மகளும் தனுஷின் சகோதரியுமான கார்த்திகா தேவி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கே உதவி செய்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். அவரை எப்போதும் நானும் என் குடும்பத்தாரும் மறக்கவே மாட்டோம் என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். ஆனால், தனுஷ் இதுவரை விஜயகாந்த் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலியோ அந்த குடும்பத்தினருக்கு ஆறுதலோ கூறவில்லை என ப்ளூ சட்டை மாறன் சாட்டையை சுழற்றியுள்ளார்.

கேப்டன் மில்லர் நிகழ்ச்சி: வரும் பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து பெரிய விடுமுறையில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தலாம் என தனுஷ் முடிவு பண்ணி களமிறங்குகிறார். அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியா பவானி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்த திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Blue Sattai Maran trolls Dhanush for forgetting Captain Vijayakanth

கேப்டனை மறந்த கேப்டன் மில்லர்: கேப்டன் மில்லர் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்துள்ள நடிகர் தனுஷ் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்றும் அவர் குடும்பத்துக்கு கேப்டன் செய்த உதவியை எல்லாம் தனுஷ் மறந்து விட்டார் என்றும் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டு பற்ற வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X