வடசென்னை, புதுப்பேட்டையை எல்லாம் தனுஷ் ஓவர்டேக் பண்ணிட்டாரு செட்டியார்.. ப்ளூ சட்டை மாறன் குசும்பு!
சென்னை: தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது என்றும் ஆனால், இரண்டாம் பாதி படு சொதப்பல் என்றும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. ஆனால், தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படம் அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றும் தனுஷ் இயக்குநராக தரமான சம்பவத்தையே செய்துள்ளார் என்றும் பெரிய அளவு பிளாக்பஸ்டர் படத்தை கொடுக்க சற்றே தவறிவிட்டார் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ராயன் படத்திற்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் படத்தை கலாய்த்து மீம் ஒன்றை போட்டுள்ளார்.
சொதப்பும் தமிழ் சினிமா: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தொடங்கி ராயன் படம் வரை தமிழ் சினிமாவில் ஹிட் அடிக்க வேண்டிய பல படங்கள் ஒரு சில காரணங்களால் இரண்டாம் பாதி சொதப்பலால் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. அரண்மனை 4, கருடன், மகாராஜா உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பை போல இந்த படங்களும் பெரும் வரவேற்பை பெற வேண்டிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
100 கோடியை தாண்டுமா?: அரண்மனை 4 மற்றும் மகாராஜா, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் தான் இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. அந்த வரிசையில் தனுஷின் ராயன் இடம் பெறுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர். முதல் வாரம் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை தனுஷின் ராயன் திரைப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் இந்த படம் ஓடினால் தான் லாபத்தை ஈட்டும் என்றும் இல்லையென்றால் கேப்டன் மில்லர் நிலைமைதான் இந்தப் படத்திற்கும் என்கின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: 'வடசென்னை, புதுப்பேட்டையை எல்லாம் தனுஷ் ஓவர்டேக் பண்ணிட்டாரு செட்டியார். மொத்த படமும் தெறி மாஸ். மூணு தடவ பாக்கலாம்' மீ: என சதுரங்க வேட்டை படத்தில் இளவரசு ரியாக்ஷனை போட்டு பங்கமாகா கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

எந்த படம் தான் புடிக்கும்?: தனுஷின் ராயன் படம் நல்லா இல்லை என ப்ளூ சட்டை மாறன் சொன்ன நிலையில், உனக்கு எந்த படம் தான் புடிக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப, மகாராஜா, கருடன் மற்றும் டிடி ரிட்டர்ன்ஸ் படங்களின் விமர்சனத்தை பாரு என பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். தனுஷ் இன்னும் கொஞ்சம் 2ம் பாதியை செதுக்கியிருந்தால் படம் நல்ல படமாகவே வந்திருக்கும் என்றுதான் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ரசிகர்கள் ராயன் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











