மலையாள சினிமா மாஸ் பண்ணுது.. கோலிவுட்டின் ஃபேக்கான சக்சஸ் மீட்.. ப்ளூ சட்டை மாறன் மரண கலாய்!

சென்னை: கடந்த ஆண்டு பாலிவுட் மற்றும் கோலிவுட்டுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு ஆரம்பத்தில் நல்ல ஆண்டாக மாறியிருக்கிறது. தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி வரும் படங்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இதனை குறிப்பிட்ட ப்ளூ சட்டை மாறன் அப்படியே போகிற போக்கில் கோலிவுட்டில் நடக்கும் சக்சஸ் மீட் விஷயத்தையும் பங்கமாக வச்சு செய்து விட்டார்.

பொதுவாகவே மலையாள படங்கள் சிறிய பட்ஜெட்டில் தான் எடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், 4 கோடி எல்லாம் வச்சுக்கிட்டு படம் எடுக்க வராதீங்க என விஷால் சொல்லி கிண்டல் பண்ணுவதற்கு பதிலாக நல்ல கதை இல்லைன்னா படம் எடுக்க வராதீங்க என சொல்லியிருக்கலாம்.

Blue Sattai Maran trolls fake Kollywood success meet and praising Malayalam cinema recent hits

பிசினஸ் மட்டுமே குறி: தமிழ் சினிமாவில் கலையை நம்பி சினிமா உலகம் செயல்படுவதில்லை என்றும் வெறும் வியாபாரத்தை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருப்பதால் தான் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் பெரிதும் இங்கே வருவதில்லை என்றும் சிறு பட்ஜெட் படங்கள் என்றால் அதில் ஜாதிய பிரச்சனைகள் நிறைந்து காணப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படங்களில் பழைய படங்களின் காப்பி மட்டுமே ரசிகர்களுக்கு வேறு வழியில்லாமல் பரிமாறப்படுகின்றன என கலாய்த்து வருகின்றனர்.

மாஸ் காட்டும் மலையாள சினிமா: படங்கள் பெரிதாக ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து நல்ல கலை நயம் கொண்ட சினிமாவை கொடுக்க வேண்டும் என்றும் நம்மை சுற்றி நடக்கும் சாதாரண விஷயங்களை படமாக சுவாரஸ்யமாக கொடுக்க வேண்டும் என்கிற மெனக்கெடல் மற்றும் தேடல் காரணமாக இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்து வசூலிலும் நல்ல வருமானத்தை பார்த்து வருகிறது என்கின்றனர்.

ஃபேக் சக்சஸ் பார்ட்டி: ஆனால், கோலிவுட்டில் ரியல் சக்சஸ் பார்ட்டி கொண்டாடாமல் ஃபேக்காக சக்சஸ் பார்ட்டி வைத்து தங்கள் படம் பிளாக்பஸ்டர் என வெட்கமே இல்லாமல் போட்டுக் கொள்கின்றனர் என ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் கோலிவுட்டில் வெளியான அனைத்து படங்களும் ஃபிளாப் படங்கள் தான் என ஏற்கனவே ஒரு பட்டியல் வெளியிட்ட நிலையில், தற்போது மலையாள படங்களுடன் கம்பேர் பண்ணி மரண கலாய் கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X