என்னது வாய்ஸ் ஓவர் மேனனா? ப்ளூ சட்டை மாறனின் நக்கல் ட்வீட்.. எங்கே போய் முடியப் போகுதோ?

சென்னை: ப்ளூ சட்டை மாறன் பற்றி இயக்குநர் கெளதம் மேனன் பேசிய நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல் முற்றி உள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்த ப்ளூ சட்டை மாறன் தற்போது அந்த படத்தை இயக்கிய கெளதம் மேனன் மற்றும் நாயகன் சிம்புவுடன் நேரடியாக மல்லு கட்டி வருகிறார்.

கெளதம் வாசுதேவ் மேனனை 'வாய்ஸ் ஓவர் மேனன்' என கிண்டல் செய்து பதிவிட்டுள்ள மீம் ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

வெடித்த பிரச்சனை

வெடித்த பிரச்சனை

இயக்குநர் மணிரத்னம், ரஜினிகாந்த், ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் என வாரம் ஒருவருடன் சண்டை போட்டு வந்த ப்ளூ சட்டை மாறனுக்கு சில வாரங்களாக யாரும் சிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் வெந்து தணிந்தது காடு படம் வெளியான நிலையில், சிம்பு மற்றும் அந்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் உடன் பெரிய சண்டையே வெடித்துள்ளது.

பெயரில் சாதி

பெயரில் சாதி

"சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன்." என இயக்குநர் கெளதம் மேனனின் பெயரில் சாதி உள்ளதாக குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

படிச்சி வாங்குன பட்டமா

படிச்சி வாங்குன பட்டமா

"மேனன்.. நீங்க படிச்சி வாங்குன பட்டமா?" என வேதம் புதிது படத்தில் பாலு தேவர் கதாபாத்திரத்தில் நடித்த சத்யாராஜுக்கு பளார் பளார் என அறைவிடும் காட்சியை பதிவிட்டு மீண்டுமொரு சர்ச்சை ட்வீட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனனை வம்பிழுத்து வருகிறார்.

இறங்கி செய்யப் போகிறேன்

இறங்கி செய்யப் போகிறேன்

ப்ளூ சட்டை மாறன் பற்றி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரை இறங்கி செய்யலாம்னு தோணுது என இயக்குநர் கெளதம் மேனன் ஆவேசப்பட்டு பேசியது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர். இறங்கி செய்யப் போகிறேன் என அவர் பேசியதை குறிப்பிட்டு தற்போது ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

வாய்ஸ் ஓவர் மேனன்

வாய்ஸ் ஓவர் மேனன்

"இறங்கி செய்ய போகிறேன் - வாய்ஸ் ஓவர் மேனன் ஆவேசம். 'ஐயா... வணக்கமுங்க. உங்க சாகசத்துக்கு வைட்டிங்குங்க'" என கவுண்டமணி, செந்தில் மீம் போட்டோவை போட்டு கலாய்த்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் சிம்புவிடம் நேரடியாக ப்ளூ சட்டை மாறன் மோதி உள்ள நிலையில், அவர்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பார்த்திபனை விட்டுட்டாரு

பார்த்திபனை விட்டுட்டாரு

இரவின் நிழல் படம் வெளியான சமயத்தில் பார்த்திபன் உடன் வம்பு சண்டை போட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் இப்போ பார்த்திபனை விட்டுட்டு கெளதம் வாசுதேவ் மேனன் பக்கம் திரும்பியுள்ளார் என வடிவேலுவின் வேறலெவல் மீமை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X