GOAT 3ஆவது சிங்கிள் SPARK.. கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.. விஜய்க்கு வந்த சோதனை
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் நேற்று வெளியானது. ஸ்பார்க் என்று தொடங்கும் அந்தப் பாடலை கங்கை அமரன் எழுத, யுவன் ஷங்கர் ராஜாவும், வ்ருஷாவும் பாடியிருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. இந்தச் சூழலில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பாடலை கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக அவை சக்கைப்போடு போட்டதாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் சொன்னாலும் விமர்சன ரீதியாக ட்ரோல்களை சந்தித்தன. அநேகமாக கடந்த பல வருடங்களில் விஜய்யின் படங்களில் வரிசையாக இப்படி ட்ரோலை சந்தித்தது இந்த மூன்று படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியிருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இப்படி அவர்கள் அப்செட்டில் இருக்கும்போது ஸ்வீட் சர்ப்ரைஸாக வெளியானது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி சேர்கிறது என்று. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் GOAT படம் விஜய்க்கும் சரி, வெங்கட் பிரபுவுக்கும் சரி முக்கியமான படம்தான். ஏனென்றால் வெங்கட் பிரபு இதற்கு முன்பு இயக்கிய கஸ்டடி படம் மோசமான தோல்வியை தழுவியது. எனவே இந்தப் படத்தில் தானும் கம்பேக் கொடுத்து விஜய்க்கும் தரமான படம் கொடுக்க வேண்டுமென்பதில் வெங்கட் பிரபு தெளிவாக இருக்கிறார்.
டீ ஏஜிங்: இந்தப் படத்தில் வெங்கட் பிரபு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறார். விஜய்யின் வயதை குறைத்து காண்பிப்பதற்காக அமெரிக்காவரை சென்று வேலை செய்துவந்தார்கள் விஜய்யும், வெங்கட் பிரபுவும். விஜய் ஏற்கனவே இளமையாக இருப்பவர். எனவே அவரை டீ ஏஜிங்கில் பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தார்கள்.மேலும் இந்தப் படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரண்டு சிங்கிள்கள்: அதேபோல் பல வருடங்கள் கழித்து விஜய் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் காரணமாக பாடல்கள் மீது உச்சக்கட்ட ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த ஆர்வத்தை நிறைவேற்றாமலே போயின படத்திலிருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள். அந்த இரண்டு பாடல்களையுமே விஜய் பாடியிருந்தது. விஜய் பாடிய பாடல்களில் கம்மியான வரவேற்பு கிடைத்த பாடல்களில் இந்த இரண்டு பாடல்கள்தான் முன்னணியில் இருக்கின்றன.
சொதப்பிய மூன்றாவது சிங்கிள்: முதலிரண்டு பாடல்களுமே சொதப்பியதன் காரணமாக படத்தின் மூன்றாவது சிங்கிளில் யுவன் கலக்கியிருப்பார் என்று ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தனர். நேற்று அந்தப் பாடல் வெளியானது. கங்கை அமரன் பாடலை எழுத; யுவன் ஷங்கர் ராஜாவும், வ்ருஷா பாலுவும் இணைந்து பாடலை பாடியிருந்தன. ஆனால் இந்தப் பாடலும் போதிய வரவேற்பை பெறவில்லை.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: முக்கியமாக பாடலின் லிரிக்கல் வீடியோவில் டீ எஜிங் விஜய் தோன்றியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யை சும்மா விட்டிருந்தாலே இளைமையாகத்தான் இருந்திருப்பார் டீ ஏஜிங்கில் சொதப்பிவிட்டார்களே என்று ரசிகர்கள் நொந்துகொண்டனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அப்பா.. De aging பண்ண சொன்னா.. Dolly Chai wala வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா' என்று கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











