மட்டன் வீச்சு பரோட்டா.. GOAT இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கோட் படத்தின் இசை நன்றாக வந்துக் கொண்டிருக்கிறது என்றும் இனிமேல் பேச்சு இல்லை ஸ்ட்ரெய்ட்டா வீச்சு தான் என அதிரடியாக பேசி விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கினார். இந்நிலையில், அதற்கு கமெண்ட் போட்டு கலாய்க்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை காண்டாக்கி உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், ஜி.வி. பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையில் பல படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இப்போது தான் மீண்டும் அண்ணன் வெங்கட் பிரபுவின் தயவால் விஜய் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைத்தது.

பிஜிஎம் கிங்: பில்லா, மங்காத்தா படங்களுக்கு எல்லாம் யுவன் சங்கர் ராஜா போட்ட பிஜிஎம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து வெங்கட் பிரபு படங்களுக்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா கடைசியாக மாநாடு படத்திலும் சிறப்பான இசையை அமைத்திருந்தார். சமீபத்தில் கேன்சர் பாதிப்புக் காரணமாக உயிரிழந்த யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரிணி அந்த படத்தில் இடம்பெற்ற மெஹரசைலா பாடலையும் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சொதப்பி வரும் யுவன்: ஆனால், மாநாடு படத்திற்கு பிறகு யுவன் இசையில் சமீப காலமாக பல படங்களில் சொதப்பலான இசை வெளியாகி வருவதால் விஜய்யின் கோட் படத்திற்கே அவர் வேண்டாம் என ஆரம்பத்தில் விஜய் ரசிகர்கள் அழுது புரண்டனர். அதற்கு காரணம் அஜித்தின் வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா செய்த சொதப்பல் தான் காரணம். அதிரடியாக யுவனுக்கு பதில் ஜிப்ரானை வைத்தெல்லாம் இசையமைத்து அந்த படத்தை முடித்தனர். அடுத்து அஜித் நடித்து வரும் படங்களில் யுவனை சமீப காலமாக ஒப்பந்தம் செய்வதில்லை.
மட்டன் வீச்சு: கோட் படத்தின் அப்டேட்டை பத்திரிகையாளர்கள் கேட்கும் போது, எதையும் சொல்ல மாட்டேன். இந்த முறையில் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறேன். பேச்செல்லாம் கிடையாது.. ஸ்ட்ரெய்ட்டா ஒரே வீச்சு தான் என யுவன் சங்கர் ராஜா சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் "மட்டன் வீச்சு பரோட்டா..GOAT.." என பங்கமாக கலாய்த்துள்ளார்.
கஸ்டடியில் பட்ட கஷ்டம்: வலிமை படத்தில் சொதப்பியது போதாது என வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா தமிழில் நடித்த கஸ்டடி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் சேர்ந்து இசையமைக்கிறேன் என்கிற பெயரில் ரசிகர்களை இம்சித்து விட்டனர். அப்படியெல்லாம் இல்லாமல், தளபதி விஜய் படத்துக்கு பார்த்து பக்குவமாக பண்ணுங்க யுவன் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விஜய் விடமாட்டார்: படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. பாடல்கள் விஷயத்தில் விஜய் எப்படியும் விடமாட்டார். எப்படியும் ஒரு சில பிளாக்பஸ்டர் பாடல்கள் மற்றும் பக்காவான பிஜிஎம் வரும் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











