Indian 2:இந்தியன் தாத்தாவை மனச்சாட்சியே இல்லாமல் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்! என்னனு நீங்களே பாருங்க
சென்னை: இந்தியன் 2 படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோ பாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே இருந்தது. இப்படியான நிலையில் இந்தியன் 2 படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்கள் வரும்போது எல்லாம் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். குறிப்பாக படத்தின் புரோமோஷனின்போது படக்குழு கூறிய தகவல்கள் பலரையும் ஆச்சரியமூட்டியது. படம் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

பூமர்: பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தியன் 2 படத்திற்கு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதில், 28 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் தொடங்குகின்றது. படத்தின் தொடக்க காட்சிகள் மிகவும் சிறப்பாக தொடங்கப்பட்ட கதையை, ஷங்கர் தொலைத்து வைத்துள்ளார். ஷங்கர் அப்டேட் ஆகாமல் அவுட் டேட்டடான படத்தினை எடுத்து வைத்துள்ளார். பூமர் தனமாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார். ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அரை மணி நேரத்திற்கு மேல் வருகின்றது. இறுதியாக லஞ்சம் வாங்கியவனிடம் பேசுவது எல்லாம் வர்மக்கலை புத்தகத்தை விற்பனை செய்பவர்போல் டயலாக் அமைக்கப்பட்டுள்ளது.

முதிர்ச்சி இல்லை: இந்தியன் என்றால் தப்பு செய்த தனது மகனையே கொலை செய்வார் என்பதுதான். ஆனால் இரண்டாம் பாகத்தில் கதையே முன்னுப்பின் முரணாக உள்ளது. இது கூட தெரியாம ஷங்கர் இந்த படத்தை எடுத்து வெச்சு இருக்காரு. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் தாத்தா திரும்பவும் வருகின்றார் என்றால் அதற்கான முதிர்ச்சியும் தளர்ச்சியும் இருக்கவேண்டும் தானே. ஆனால் இந்த படத்தில் இந்தியன் தாத்தா கொஞ்சம் கூட பயிற்சி இல்லாமல் சக்கர வண்டியில் செல்கின்றார், ஓடுகின்றார், பறக்கின்றார்.
இந்தியன் 2 ஊழல்தான்: படத்தில் தேவை இருக்கோ இல்லையோ ஐந்து முதல் ஆறு கெட்டப்புகளில் கமல் வருகின்றார். ஒட்டுமொத்த படத்திலும் கேமரா, ஆர்ட் டைரக்ஷன், இந்தியன் படத்தின் பின்னணி இசை இந்த படத்திலும் வருவதால் அதுவும் நன்றாக உள்ளது. மறைந்த கலைஞர்களின் குரல் மற்றும் காட்சிகள் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் செய்திருந்தனர். அது நன்றாக இருந்தது. ஊழல், லஞ்சம், விதி மீறல் எங்கு நடந்தாலும் அதனை தட்டிக் கேட்பதுதான் இந்தியன். ஆனால் இரண்டு பாகத்தில் முடிக்க வேண்டிய கதையை மூன்று பாகத்திற்கு எடுத்து வைத்துள்ளதே ஊழல்தான்” என குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்காரங்க: இது மட்டும் இல்லாமல் தனது எக்ஸ் பக்கத்தில், இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல் ஹாசனும் பேசிக் கொள்வதைப் போல் மீம் பகிர்ந்துள்ளார். அதில், ஷங்கர் கமல்ஹாசனிடம், “ உன் கட்சிக்காரர்களை பார்க்க வைத்தாவது படத்தை ஹிட் ஆக்கிவிடு எனக் கூறுவதைப் போலவும், அதற்கு கமல், எனது கட்சியில் என்னைத் தவிர யாருமே இல்லை என பதில் கூறுவதைப் போலவும் அமைக்கப்பட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறனின் இந்த மீமிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இன்றைக்கு இணையத்தில் உலாவரும் முக்கிய செய்தியே, ஒரு படத்தின் டிக்கெட் என்னிடம் உள்ளது. அதற்கு பாதி விலை கொடுத்தால் போதும் என டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் புலம்புவதுதான் என இந்தியன் 2 படத்தை குறிப்பிடாமல் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











