சனாதனம்னா என்ன?.. ஜவானை பார்த்துட்டு உயிரோட வருவேனான்னே தெரியல.. ப்ளூ சட்டை மாறன் அலப்பறை!

சென்னை: போன மாசம் ஜெயிலர் படத்தை எந்த அளவுக்கு துவைக்க முடியுமோ துவைத்து எடுத்த ப்ளூ சட்டை மாறன் அந்தப் படத்தின் வசூல் சாதனைக்கும் நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்து வந்தார் கடைசியில் வச்சு செய்யப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக ரிலீசாக உள்ள ஷாருக்கானின் ஜவான் பக்கம் தாவி இருக்கிறார் நம்ம ப்ளூ சட்டை மாறன்.

ஜவான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நடிகை நயன்தாராவுடன் சாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கிறார் அதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தை பார்த்துவிட்டு உயிரோடு வருவேனா மாட்டேனா என ட்வீட் போட்டு கதற விட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Blue Sattai Maran trolls Jawan run time length in a recent tweet with Sanatan Dharma linkup

ஷாருக்கானின் ஜவான்: மேலும் ஏற்கனவே இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி வரும் சனாதனம் சர்ச்சையையும் தொட்டுக் கொண்டு அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட அனைத்து படங்களையும் கழுவி ஊற்றியவர் ப்ளூ சட்டை மாறன்.

இந்நிலையில் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் விஜய் சேதுபதி நயன்தாரா பிரியாமணி நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நெகட்டிவ் ட்வீட்களை போட ஆரம்பித்துள்ளார்.

Blue Sattai Maran trolls Jawan run time length in a recent tweet with Sanatan Dharma linkup

ப்ளூ சட்டை மாறன் கலாய்: 'சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?' , 'ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?' என ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் ஷாருக்கான் மற்றும் விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூல் அறிவிப்பை எல்லாம் வடை எனக் கூறிவந்த ப்ளூ சட்டை மாறன் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தையும் பார்த்து விட்டு என்ன என்ன சொல்லப் போகிறாரோ என்றும் வரிசையாக ஜவான், லியோ என ப்ளூ சட்டை மாறனுக்கு இம்பிரஷன்ஸ் அள்ள ஏகப்பட்ட கன்டென்ட்டுகள் கிடைக்கப் போவது கன்ஃபார்ம் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X