வலதுசாரி எழுத்தாளர்.. ஜெயமோகனை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. மஞ்சுமெல் பாய்ஸ் பஞ்சாயத்து பத்திக்கிச்சு!

சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் கண்டு ரசித்து வரும் நிலையில், ஜெயமோகனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், காட்டமாக “கேரளா பொறுக்கிகள்” என ஜெயமோகன் குறிப்பிட்ட நிலையில், அதை சுட்டிக்காட்டி ஜெயமோகனை வம்பிழுக்கும் விதமாக “வலதுசாரி எழுத்தாளர்” என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.

மொழிகளை கடந்து ஒரு படம் மக்களுக்கு பிடித்து விட்டால் அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஜெயமோகனின் தலைசிறந்த நூல்களுக்கு கேரளாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Blue Sattai Maran trolls Jeyamohan with right wing writer after Manjummel Boys controversy


கமல்ஹாசனும் ஜெயமோகனின் தீவிர ரசிகர் தான். அவர் நடித்து வெளியான குணா படத்தை மையமாக கொண்டு வெளியாகி உள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கமல்ஹாசனும் பாராட்டிய நிலையில், ஜெயமோகன் அதுவொரு குப்பை படம் என விளாசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன?: மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், ஜெயமோகன் அந்த படம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கு வரும் கேரள பொறுக்கிகளின் மனநிலையில் தான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் உருவாக்கப்பட்டுள்ளது என விளாசி உள்ளார்.

கேரள பொறுக்கிகள்: மஞ்சுமெல் பாய்ஸ் படம் புனைவு அல்ல என்றும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் பொறுக்கிகள் எல்லாம் குடித்து விட்டு இப்படித்தான் கும்மாளம் போடுகின்றனர் என்றும் அதைத்தான் மஞ்சுமெல் பாய்ஸ் காட்டுகிறது என ஜெயமோகன் விளாசி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் இளைஞர்களும், கோவா செல்லும் குடிமகன்களும் எப்படிப்பட்ட ஆட்கள் என்பதையும் ஜெமோ விளக்கி விட்டால் நல்லா இருக்கும் என மலையாள ரசிகர்கள் அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ப்ளூ சட்டை மாறன் விளாசல்: ப்ளூ சட்டை மாறன் ஒரு படி மேலே சென்று வலதுசாரி எழுத்தாளர் ஜெயமோகன் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை எப்படி கழுவி ஊற்றியுள்ளார் பாருங்க என ஒரு செய்தியை ஷேர் செய்து நல்லா ஒரு படம் ஓடுனா இவருக்கு பிடிக்காதே என வெளுத்து வாங்கி உள்ளார்.

Blue Sattai Maran trolls Jeyamohan with right wing writer after Manjummel Boys controversy

ஜெமோ ரசிகர்கள் அட்டாக்: ப்ளூ சட்டை மாறன் ஜெயமோகனை வலது சாரி எழுத்தாளர் என சொன்ன நிலையில், அவர் எழுதிய வெண்முரசு நாவலை படித்திருந்தால் நீங்க இப்படி சொல்லியிருக்க மாட்டீங்க என ஜெயமோகன் ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட்டனர். அதற்கு நல்ல காமெடி என கமெண்ட் போட்டு மறுபடியும் பங்கம் பண்ணியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X