Kalki 2898 AD.. கமல் ரசிகர்களை மிரட்டுகிறார்களா பிரபாஸ் ரசிகர்கள்?.. ப்ளூ சட்டை மாறன் கலாய் ட்வீட்
மும்பை: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். இதில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருக்கிறார்.
தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

மொக்கை வாங்கிய ஆதி புருஷ்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக ரிசல்ட் இருந்தது. ஆதிபுருஷை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். கேஜிஎஃப் இயக்குநர் என்பதால் இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் படம் படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பிரபாஸும், அவரது ரசிகர்களும் நொறுங்கிப்போயினர்.
கல்கி 2898 ஏடி: இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ். இதில் அவருடன் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் ராஜமௌலி, துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கேமியோ ரோலிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று பான் இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர்.
கலவையான விமர்சனம்: படத்தை இதுவரை பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். ஒருதரப்பினர் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், கதை சொல்லிய விதத்தை சிலாகித்துக்கொண்டிருக்க; மறுதரப்பினரோ படத்தில் ஒன்றுமே எடுபடவில்லை என்று ஓபனாகவே பேசுகின்றனர். அதேசமயம் அமிதாப் பச்சன், கமல் ஹாசன் ஆகியோரின் நடிப்பு மிகச்சிறப்பாக இருப்பதாகவும் புகழும் அவர்கள்; கமல் ஹாசன் வரும் நேரம் கொஞ்சம்தான் என்றும் கூறுகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: ஒட்டுமொத்தமாக இதுவரை வந்திருக்கும் விமர்சனங்களை பார்க்கையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்கள் படத்தை கொண்டாடிவருவதும்; தமிழ்நாட்டில் சுமாரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருப்பது புலப்படுகிறது. இன்றைய நாள் முடிவில் படத்தின் ரிசல்ட் உறுதியாக தெரிந்துவிடும். இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறன் கல்கி படத்தையும் இந்தியன் 2 படத்தையும் ஒப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னது.. கல்கியை தமிழ்நாட்டில் ஹிட் ஆக்கலன்னா இந்தியன் 2வை ஆந்திரால ஹிட்டாக்க மாட்டீங்களா?.. என்னடா இது புது வகையான மெரட்டலா இருக்கு?" என்று குறிப்பிட்டிருக்கிறார். கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படமும் பான் இந்தியா படமாக ஜூலை 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











