Vijay: பார்ட் டைம் அரசியல்வாதி.. கமல் சார்... கேட்டுச்சா?.. சேட்டையை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு நடிகர் விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இனி முழு நேர அரசியல் தான் ஏற்கனவே கமிட் ஆன படத்தை மட்டும் முடித்துக் கொடுத்து விட்டு வருகிறேன் என தெளிவாக ஒரே அறிவிப்பில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டார் தளபதி விஜய். இந்நிலையில் விஜய் அரசியல் வருகையை வைத்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை ப்ளூ சட்டை மாறன் வம்பிழுத்து வருகிறார்.
தனது கட்சியின் பெயரை மட்டும் அறிவிக்காமல் ஒரே பெயரில் ஜாதி மதம் சாராத கட்சி என்றும் ஊழல் இல்லாத கட்சியாகவும் மக்களுக்கான கட்சியாகவும் தமிழக வெற்றி கழகம் இருக்கும் என அறிவித்த விஜய் சினிமாவில் இருந்து தான் விலகுவது குறித்த விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

2 ஆண்டு டெஸ்டிங்: நடிகர் விஜய் தி கோட் மற்றும் இன்னொரு படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு 2 ஆண்டுகள் ஓய்வு கொடுத்து விட்டு 2026 தேர்தலை சந்திப்பார் என்றும் அந்த தேர்தலில் பெரிய வெற்றி கிடைத்தால் அரசியலில் தொடர்வார் என்றும் பலத்த அடி வாங்கினால் மீண்டும் அதிரடியாக நடிக்க வந்து விடுவார் என்றும் கடும் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், சின்ன பிரேக் எல்லாம் இல்லை. ஒரேயடியாக சினிமாவில் இருந்து விலகிவிடுவேன் என அறிவித்துவிட்டார் விஜய்.
கமலுக்கு குட்டு: "அரசியல் என்பது தொழில் அல்ல. புனிதமான மக்கள் பணி. விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் - விஜய். பார்ட் டைம் அரசியல்வாதி..கமல் சார்... கேட்டுச்சா?" என்று ப்ளூ சட்டை மாறன் கமல்ஹாசனை ட்ரோல் செய்துள்ளார். ஆரம்பத்தில் எல்லாம் மய்யம் என்று தான் சொல்வார்கள். அதன் பின்னர், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து சீட் கேட்பாங்க என்றும் நெட்டிசன்களும் சேர்ந்துக் கொண்டு கமல்ஹாசனை கலாய்த்து வருகின்றனர். அதே போல ரஜினியையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா விஜய்?: அரசியல் களத்தில் முழுவதுமாக இறங்கிய பின்னர் தோல்வியை தழுவினாலும் நடிகர் விஜய் சொன்ன வாக்கை காப்பாற்றி சினிமாவை விட்டு முழுவதுமாக விலகுவாரா? அல்லது அரசியலில் அடி வாங்கினால் அதன் பின்னர் கட்சியை கலைத்து விட்டு நடிக்க வந்து விடுவாரா? என கமல் ரசிகர்கள் பதிலுக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











