சிக்கன் ரைஸ் தாத்தா.. முதலில் தலைவர் தாக்கப்பட்டார்.. இப்போ கமலை ஃப்ரை பண்ண ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியான பின்னர் அந்த படத்திற்கான ஹைப் எங்கேயோ போகப் போகுது என ஆன்லைன் டிராக்கர்களின் அலப்பறை நேற்று காலை முதலே ஜாஸ்தியாகத்தான் இருந்தது. ஆனால், டிரெய்லர் வெளியான பின்னர் அனைவரும் அடி வெளுத்து வருகின்றனர்.
அந்த பழைய பேஷண்ட் அனிருத்தை டிஸ்சார்ஜ் செய் இந்த புதிய பேஷண்ட் ஷங்கரை அட்மிட் செய் என கமல்ஹாசனின் வசூல் ராஜா பட மீம்களும் டிரெண்டாகி வருகின்றன. இந்தியன் 2 படம் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பார்க்க பிரம்மாண்டமாக இருந்தாலும் இந்தியன் படத்தில் இருந்த அந்த உணர்வு கொஞ்சம் கூட ஒரு ஃபிரேமில் கூட இல்லை என்றே ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன் 2 டிரெய்லரில் ரஜினிகாந்தை தாக்கி வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக நேற்று டிரெய்லர் வெளியான உடனே தலைவர் தாக்கப்பட்டார் என ட்வீட் போட்டு அதிரடி கிளப்பிய ப்ளூ சட்டை மாறன் தற்போது கமல்ஹாசனின் கெட்டப்புகளை கலாய்த்து வருகிறார்.
இந்தியன் சேனாபதியை காணோம்: இந்தியன் 2 படத்தில் இருந்த சேனாபதி தாத்தாவையே காணோம் என ரசிகர்கள் ஓல்டு இஸ் கோல்டு என பழைய இந்தியன் படத்துக்கே ஃபயர் விட்டு வருகின்றனர். தாத்தா கடைசியில யாரை கதற விடப் போறாருன்னு பார்த்தா ரசிகர்களையும் படத்தின் தயாரிப்பாளர்களையும் தான் என வேறலெவலில் பங்கம் பண்ணி வருகின்றனர்.
சிக்கன் ரைஸ் தாத்தா: "யாமிருக்க பயமே 2014. சிக்கன் ரைஸ் தாத்தா?" லுக்கில் கமல்ஹாசன் இருக்கார் என தற்போது ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 லுக்கை மரண கலாய் கலாய்த்து வருகிறார். நேற்று சிஸ்டம் சரியில்லைன்னு சொல்வாங்க, ஆனால், ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட மாட்டாங்க என சித்தார்த் பேசிய வசனத்தை வைத்து தலைவர் தாக்கப்பட்டார் என ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

டெலிட் பண்ண ப்ளூ சட்டை மாறன்: "கொஞ்சம் பீதியா தான் இருக்கோ" என இந்தியன் படத்தில் தசாவதாரத்தை மிக்ஸ் செய்து கோப்ரா ரேஞ்சுக்கு ஒரு புது டிஷ்ஷை ஷங்கர் கிண்டி வைத்திருப்பதை பார்த்து ஷாக்காகி ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்டை திடீரென டெலிட் செய்து விட்டார். அதுகுறித்து ரசிகர்கள் கேட்க, படத்தில் இருந்த ஸ்க்ரீன்ஷாட்களை பயன்படுத்த வேண்டாம் என டெலிட் செய்து விட்டேன் என பதில் அளித்துள்ளார்.

திட்டும் கமல் ரசிகர்கள்: புக் கவரை பார்த்து எதையும் ஜட்ஜ் பண்ணாதீங்க ப்ளூ சட்டை மாறன் படம் வெளியாகும் போது இத்தனை கெட்டப்புகள் எதற்கு, என்பது உங்களுக்கு நன்றாகவே புரியும். படத்தை இயக்கியிருப்பது ஷங்கர், நடித்திருப்பது கமல்ஹாசன். நிச்சயம் திரைக்கதையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கும் என்று கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் ட்ரோலை கண்டித்து திட்டி வருகின்றனர். வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக காத்திருக்கும் இந்தியன் 2 வெற்றி தான் இந்தியன் 3 படம் ரிலீஸ் ஆகவே காரணமாக அமையும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











