ரஜினிகாந்தை மட்டுமில்ல.. இப்போ கமலையும் வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: சினிமா பிரபலங்களை கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் எனது தனது கருத்தை முன்வைத்த கிரிக்கெட் வீரர் சேவாக்கையும் விடாமல் ட்ரோல் செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன் படத்தைப் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு பதில் அளித்த ப்ளூ சட்டை மாறன் போகிற போக்கில் நடிகர் கமல்ஹாசனையும் வம்பிழுத்து போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்ததிலிருந்து ப்ளூ சட்டை மாறன் படு ஆக்டிவாக மாறி நடிகர் ரஜினிகாந்த் பங்கம் பண்ணி வந்தார். ஜெயிலர் படத்தின் வசூலை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அதையும் வடை என்றே வறுத்து எடுத்திருந்தார்.
ரஜினியை விட விஜய் மற்றும் கமல் நல்ல நடிகர்கள் அந்த நடிகர்களின் ரசிகர்கள் சப்போர்ட்டை பெற்று வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது கமல் குறித்தும் கிண்டல் செய்வது போல போட்டோ இல்ல ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன் திரைப்படத்தின் பெயரையும் ஆன்ட்டி பாரத்தியன் என மாற்ற வேண்டும் என்றும் ஆன்டி பாரத்தியன் 2 வருமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பிய நிலையில், முதலில் கமல் நடித்த பாரத்தியன் 2 படம் வரட்டும் பின்னர் ஆன்டி பாரத்தியன் 2 பற்றி பேசலாம் என கமெண்ட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
மேலும் வழக்கம்போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் விட்டு வைக்காமல் ஜவான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தகவல்களை வெளியிட்டு The box office Superstar of India ஷாருக்கான் என ரஜினியை தாக்குவது போலவே ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் தலைவர் என யாரை கொண்டாடி பாட்டு பாடினார் என்றெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்று ப்ளூ சட்டை மாறனை ரஜினி ரசிகர்களும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











