அவதார் வசூலையே மிஞ்சப் போகிறதா கங்குவா?.. ஜேம்ஸ் கேமரூனை கோர்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் ஹேப்பி!
சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் 1000 கோடி வசூல் செய்தாலும், 2000 கோடி வசூல் செய்தாலும் ஜிஎஸ்டி சலானையே காட்டப்போவதாக ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளுக்கு எதிராக ஞானவேல்ராஜா பேசியது ஏகப்பட்ட ட்ரோல்களை கொண்டு வந்து சேர்த்தது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் 500 கோடி வசூல் செய்யவே இந்த ஆண்டு தவித்து வரும் நிலையில், 2000 கோடி வசூலை கங்குவா அள்ளும் என்கிற தயாரிப்பாளரின் நம்பிக்கையை ரசிகர்கள் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ் என கலாய்த்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் பல படி மேல் சென்று ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படத்தின் வசூலையே கங்குவா படத்தின் வசூல் முறியடித்து விடும் என ஜேம்ஸ் கேமரூனே நினைத்து விட்டார் என்றெல்லாம் கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விட்டு கலாய்த்துள்ளார்.
கங்குவா புரமோஷன் ஸ்டார்ட்: சூர்யாவின் கங்குவா படத்திற்கான பாசிட்டிவ் புரமோஷன்களை மும்பை, டெல்லி என சூர்யா ஆரம்பித்து விட்டார். வரும் சனிக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. கங்குவா படத்திற்கான நெகட்டிவ் பப்ளிசிட்டியை ப்ளூ சட்டை மாறனும் ஆரம்பித்து விட்டார் என சூர்யா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
2000 கோடி வசூல்: சூர்யா நடித்து கடைசியாக பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த படம் என்றால் அது சிங்கம் 2 படம் தான் என்றும் அதற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகளாக சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியே கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூலை அள்ளும் என தயாரிப்பாளர் தெரிவித்து இருப்பது ஓவர் பில்டப் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அவதார் வசூலையே தாண்டும்: இந்நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களை விட அடுத்த பெரிய படமான கங்குவா படத்தை கலாய்த்து தள்ளலாம் என முடிவெடுத்த ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவில் கங்குவா எனும் தமிழ்ப்படம் பற்றி வரும் செய்திகளை கேட்டு அசந்து போகிறேன். அவதாரை விட 100 மடங்கு பிரம்மாண்டமாக உள்ளதாம். அவதார் வசூலை தகர்க்கும் எனவும் சொல்கிறார்கள். அப்படத்தை காண ஆவலுடன் உள்ளேன் - ஜேம்ஸ் கேமரூன்." என பதிவிட்டு பங்கம் பண்ணியுள்ளார்.



Click it and Unblock the Notifications











