Fight Club: மேடம் இது பெரிய உருட்டு மேடம்.. ஃபைட் கிளப் ஒரு மொக்கைப் படம்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் மூலமாக வெளியான ஃபைட் கிளப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி உள்ளார். ஆனால், அதை உருட்டு என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு பயங்கரமாக கலாய்த்துள்ளார்.

உறியடி படத்துக்கு பிறகு உறியடி 2 படத்தைக் கொடுத்து அதன் பின்னர் காணாமல் போய் விட்டார் விஜய் குமார். சூரரைப் போற்று படத்துக்கு வசனம் எழுதி இருந்தாலும், இவரது புகழ் பரவவில்லை.

இந்நிலையில், மீண்டும் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக ஃபைட் கிளப் படத்தின் மூலம் வந்திருந்தாலும், படம் ரசிக்கும் படியாக இல்லை என்றே விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு: ஆனால், படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு படம் ராவாகவும் பிளடி வயலன்ட்டாகவும் உள்ளது. விஜய் குமார் ஒரு நல்ல ஹீரோ மெட்டீரியல் அவரது உழைப்புக்கு அவர் உச்சம் தொட வேண்டும் என எப்போதும் நினைத்துள்ளேன். இந்த படம் அவரது கனவை நனவாக்குக்கு என நம்புகிறேன் என கார்த்திக் சுப்புராஜ் அவருக்கு பிடித்த ஃபைட் கிளப் படத்தை பாராட்ட்டி தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

Blue Sattai Maran trolls Karthik Subbaraj review about Fight Club

மேடம் இது உருட்டு: கடந்த ஒரு வாரமாக பெரிதாக சினிமா மேட்டர் ஏதும் கிடைக்காமல் இருந்த ப்ளூ சட்டை மாறனுக்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு கிடைத்த நிலையில், மேடம் இது பெரிய உருட்டு மேடம்.. படம் மொக்கையா இருக்கு என ட்வீட் போட்டு தனது ட்யூட்டியை சிறப்பாக செய்துவிட்டார்.

கஞ்சா கிளப்: மேலும், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் இந்த படத்துக்கு ஃபைட் கிளப் என பெயர் வைத்ததற்கு பதிலாக கஞ்சா கிளப் என வைத்திருக்கலாம். படம் முழுக்க ஒரே புகை மண்டலமாக இருக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன்னாடி புகை பிடித்தல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என சொல்லி விட்டு அதன் பின்னர் படம் முழுக்க அதே காட்டுகின்றனர் என வெளுத்து வாங்கி உள்ளார்.

ஹீரோயினை காணோம்: இந்த படத்தில் விஜய் குமாருக்கு ஜோடியாக மோனிஷா மேனன் நடித்துள்ளார். அவர் வரும் சில காட்சிகள் தான் நல்லா இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடைசி வரை அவரை காணவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X