பேப்பர் கப்பும் தீண்டாமை தானா?.. பா. ரஞ்சித் பேச்சை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் சமீபத்தில் பேசும் போது டீ கிளாஸில் இருந்த தீண்டாமை தற்போது பேப்பர் கப் வரை வந்திருக்கிறது என பேசியது சோஷியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக பல ட்வீட்களை போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்.
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பா. ரஞ்சித் அடுத்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

அந்த படத்தை பார்த்து வியந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடிக்க சம்மதித்தார். கபாலி படத்தின் வெற்றி காலா படத்தை இயக்கும் வாய்ப்பையும் பா. ரஞ்சித்துக்கு பெற்றுத் தந்தது. அந்த படத்தை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித்.
தங்கலான் ரிலீஸ்: சியான் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தைக் கொடுத்து வெற்றி வாகை சூடிய ரஞ்சித்துக்கு நட்சத்திரம் நகர்கிறது படம் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், தங்கலான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேப்பர் கப் பஞ்சாயத்து: மாரி செல்வராஜ் உடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் பா. ரஞ்சித் பேப்பர் கப்பும் நவீன தீண்டாமை தான் என பேசியுள்ளார். டீ டம்ளரில் சாதிய பாகுபாடு இருப்பதை பரியேறும் பெருமாள் படத்தின் கிளைமேக்ஸில் காட்டி மாரி செல்வராஜ் வைத்து அந்த படத்தை கவனிக்க வைத்தார். இந்நிலையில், அதுதொடர்பாக பேசிய பா. ரஞ்சித் பேப்பர் கப்பும் தீண்டாமையின் வெளிப்பாடு தான் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: "நீங்கள் காபி/டீ சாப்பிடும் கடைகளில் உங்கள் விருப்பப்படி கண்ணாடி டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் தருகிறார்களா அல்லது ஜாதி பார்த்து தருகிறார்களா?" என்கிற கேள்வியை எழுப்பி பா. ரஞ்சித்தின் பேச்சை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். யாரும் சாதி பார்த்து பேப்பர் கப் தரவில்லை என்றும் பா. ரஞ்சித்துக்கு எப்போதும் அதே நினைப்பு தான் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











