அலெர்ட்டா இருங்க விஜய்.. சிக்கிடாதீங்க.. பார்த்திபனை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் அவர் கடைசியாக டீன்ஸ் படத்தை இயக்கினார். இந்நிலையில் அவர் குறித்து ப்ளூ சட்டை மாறம் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபன் வல்லவர். இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்ஃபுல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை. இதனால் சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Blue Sattai Maran Parthiban Vijay

ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன்: நடிப்பில் கவனம் செலுத்த பார்த்திபனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியான அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் தோன் றிய பார்த்திபனை பார்த்து அனைவருமே மிரண்டுதான் போனார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருந்தார் பார்த்திபன். பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: இந்தச் சூழலில் சில காலம் இயக்கத்துக்கு முழுக்கு போட்டிருந்த பார்த்திபன் இயக்குநராக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படமானது கதையே இல்லாமல் உருவான படம். அஞ்சான் படத்தோடு ரிலீஸான கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றி பார்த்திபனை இன்னும் வீரியமாக இயங்க வைத்தது. அதன்படி அவர் அடுத்தடுத்து இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய படங்களில் ஒத்த செருப்பு படம் மட்டும்தான் ஹிட்டடித்தது.

பார்த்திபன் ட்வீட்: பார்த்திபனின் படங்கள் மட்டுமின்றி அவரது பேச்சு, ட்வீட் என அத்தனையுமே வித்தியாசமானதாகத்தான் இருக்கும். அந்தவகையில் விஜய் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான விஜய்யுடனான ஊடலான உரையாடல். பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமே என பார்த்தால் அது கனவு.

பகல் கனவு ஏன்?: ஏன்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனால் சத்தியமாக வந்தது. கனவுகள் நமது நினைவுகளின் நகல்கள் என்று சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்.. இப்படி சில பல காரணமாக இருக்கலாம்"என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மற்றும் பார்த்திபனின் புகைப்படத்தை பகிர்ந்து, "நேற்று என் கனவில் விஜய் வந்தார். இருவரும் டீ குடித்தபடி அரசியல் வியூகம் வகுத்தோம். அவருடன் செல்ஃபி எடுக்க நினைத்தேன். அதற்குள் கனவு கலைந்துவிட்டது.. பார்த்திபன் ட்வீட். இன்னொருவரின் கனவில்கூட உஷாராக இருக்கிறார் விஜய். அலெர்ட்டா இருங்க. சிக்கிடாதீங்க" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X