சிரஞ்சீவிக்கு அடுத்து இந்த பந்தா பரமசிவத்தையும்.. பவன் கல்யாணை பஞ்சர் பண்ண ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட பவன் கல்யாண் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து விட்ட நிலையில், ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

ஏகப்பட்ட கார்களில் பந்தாவாக சினிமாவில் காட்டும் ஹீரோயிசத்தை நிஜத்திலும் செய்து மாஸ் காட்டிய பவன் கல்யாண் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Blue Sattai Maran trolls Pawan Kalyan lost deposit in all areas at Telangana Election

வடக்கில் பாஜகவின் கை ஓங்கியிருந்தாலும் தென்னிந்தியாவில் செல்ஃபே எடுக்காது என்பதை பவன் கல்யாண் புரிந்துக் கொள்ளவில்லை என மரண கலாய் கலாய்த்து வருகிறார்.

பாஜக கூட்டணி: நடிகர் சிரஞ்சீவி கட்சி நடத்தி சொதப்பிய நிலையில், சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரது தம்பி பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை நடத்தி தெலங்கானாவின் அடுத்த சிஎம் நான் தான் என பில்டப் செய்து வந்த நிலையில், நடந்து முடிந்த தெலங்கானா தேர்தலில் பாஜக உடன் இணைந்து கூட்டணி வைத்து போட்டிப் போட்டார்.

ஆல் ஏரியா டெபாசிட் காலி: சுமார் 8 தொகுதிகளில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டி போட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது. பவன் கல்யாண் சினிமாவில் ஜெயித்தது போல அரசியலிலும் ஜெயித்து விடலாம் என நினைத்தது எல்லாம் சரி தான் என்றும் ஆனால், தென்னிந்தியாவில் பாஜக உடன் கூட்டணி வைத்து தான் தப்பு செய்து விட்டார் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: ”படங்களில் பெரிய பருப்பு போல பாடி லாங்குவேஜ். அரசியல் மேடைகளில் பிஸ்தா போல பஞ்ச் வசனங்கள். இன்று அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் அவுட்‌. சிரஞ்சீவிக்கு அடுத்து இந்த பந்தா பரமசிவத்தையும் கூப்பில் அமர வைத்து விட்டார்கள் தெலுங்கு மக்கள். சிறப்பு!!” என மரண கலாய் கலாய்த்துள்ளார். அரசியலை விட்டு அண்ணனை போல இவரும் ஒதுங்கி தனது ஓஜி படத்தில் அடுத்து கவனத்தை செலுத்துவார் என ட்ரோல் செய்து வருகின்றனர். சினிமா ரசிகர்கள் எல்லாம் தெளிவாக உள்ளனர் என்றும் தங்களுக்கு பிடித்த நடிகரே தேர்தலில் நின்றாலும் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதில் உஷாராக உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X