விளம்பர பிரியர் பார்த்திபன்.. போட்டு தாக்கிய ப்ளூ சட்டை மாறன்.. ஓபனா அடிச்சிட்டாரு

சென்னை: புதிய பாதை படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற பார்த்திபன் கோலிவுட்டின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் பட்டையை கிளப்பிவருகிறார். சமீபத்தில் அவர் சாதி குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்; சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழையும் பெற்றார். சூழல் இப்படி இருக்க பார்த்திபனை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.

பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சினிமா பணிகளை கற்றுக்கொண்ட பார்த்திபன் சீதாவை ஹீரோயினாகவும், தன்னை ஹீரோவாகவும் வைத்து இயக்கிய படம் புதிய பாதை. தான் இயக்கிய முதல் படத்திலேயே கமர்ஷியலாகவும், சமூகத்துக்கு தேவையான கருத்தையும் வைத்து படம் எடுத்து கவனம் ஈர்த்தார். அதுமட்டுமின்றி அந்தப் படம் தேசிய விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை என ஏகப்பட்ட படங்களை எடுத்தாலும் அந்தப் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

Blue Sattai Maran Trolls R Parthiban Over Court Remark Viral Tweet Sparks Debate
Photo Credit:

நடிகராக பார்த்திபன்: முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால் அவருக்கு நடிப்பதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருகட்டத்தில் தான் படங்கள் இயக்குவதை குறைத்ததால் மற்றவர்களின் இயக்கங்களிலும் ஹீரோவாக ஹிட் படங்களை கொடுத்தார். இப்போது முழுக்க முழுக்க குணசித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்துவருகிறார். இருப்பினும் இயக்கத்தை விட்டு முழுவதுமாக விலகவுமில்லை. கடைசியாக அவர் இயக்கிய டீன்ஸ் படம்கூட வித்தியாசமான அட்டெம்ப்ட்டாகத்தான் பார்க்கப்பட்டது.

சர்ச்சைகளில் பார்த்திபன்: இது ஒருபக்கம் இருக்க பார்த்திபன் சமீப காலங்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக வந்ததை வைத்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்க சொன்னால் பிரச்னை எதுவும் இல்லை' என கூறியிருந்தார். அதை பார்த்து காண்டான திரிஷா ட்வீட் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருடன் மல்லுக்கு நின்ற பார்த்திபன்; ஒருகட்டத்தில் அந்த பிரச்னையை இனிமேலும் கிளப்ப விருப்பமில்லை என முடிவு செய்து அமைதியாகிவிட்டார்.

அடுத்த சர்ச்சை: திரிஷாவுடனான சர்ச்சைக்கு பிறகு உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்ட அவர்; சாதிய ரீதியாக பேசியது சர்ச்சையை உண்டு செய்தது. பலரும் தனக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்ததைத் தொடர்ந்து சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கக்கோரி சோழிங்கநல்லூர் தாசில்தாரிடம் விண்ணப்பத்திருந்தார். மேலும் தாசில்தார் தனக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் காட்டம்: அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், "ஒரு வாரத்தில் அந்த சான்றிதழை பார்த்திபனுக்கு வழங்க வேண்டும். அதேசமயம் விளம்பரத்துக்கு வேண்டுமானால் இந்த சான்றிதழ் பயன்படும். சாதி, மதமற்றவர் என சுய பிரகடன்ம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நம் நடத்தை மூலம்தான் அதை காட்ட வேண்டும்" என அதிரடியாக தெரிவித்தது. இதனை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், 'விளம்பர பிரியரின் பார்த்திபனின் நடு மண்டையில் குட்டிய நீதிமன்றம்' என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக கடந்த 27ஆம் தேதி சோழிங்கநல்லூர் தாசில்தார் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழை வழங்கிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X