ரஜினி படம் வந்தால் போதும்.. ப்ளூ சட்டை மாறனை கைல பிடிக்க முடியாது.. இப்படி கலாய்ச்சிருக்காரே

சென்னை: கூலி திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்நிலையில் எப்போதும் ரஜினியை தொடர்ந்து கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்; ஆடியோ வெளியீட்டு விழாவில் கலாநிதி மாறன் ரஜினி பற்றி பேசியதை வைத்து கலாய்த்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. மிகப்பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது படம். ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது என்பதுபோல்தான் இதுவரை ஹைப் ஏற்றப்பட்ட படங்கள் (கங்குவா, GOAT, குட் பேட் அக்லி) பெரும் ட்ரோலையும் விமர்சனத்தையும் சந்தித்தன. எனவே இந்தப் படமும் அதுபோல் ஆகிவிடக்கூடாது என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: படத்துடைய ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கூலி படக்குழு கலந்துகொண்டது. மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் வந்து ரசித்தார்கள். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் பேச்சு ஹைலைட்டாக இருந்தது. சத்யராஜ், நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் குறித்து அவரது பேச்சில் எதார்த்தமும், நகைச்சுவையும் ஓடியது.

Blue Sattai Maran Trolls Rajinikanth And Coolie Movie
Photo Credit:

நாகார்ஜுனா பேச்சு: விழாவில் பேசிய நாகார்ஜுனா, 'ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். கூலி திரைப்படம் 100 பாட்ஷாவுக்கு சமம்' என பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய கலாநிதி மாறனோ, 'ரஜினியை ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என்று நாகார்ஜுனா சொன்னார். ஆனால் ரஜினி ஒரிஜினல் மட்டுமில்லை Only சூப்பர் ஸ்டார். அவர் ஃபோன் செய்தால் முதலமைச்சர்கள் மட்டுமின்றி பிரதமரும் உடனே எடுத்துவிடுவார்' என்றார்.

ஆயிரம் கோடி ரூபாய் வசூல்?: மேலும் அவர், 'ஜெயிலர் திரைப்படம் ரெக்கார்ட் மேக்கராக இருந்தது. கூலி ரெக்கார்ட் பிரேக்கராக இருக்கும்' எனவும் தெரிவித்தார். ஏற்கனவே இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்று பலரும் சொல்லிவருகிறார்கள். எனவே கலாநிதி மாறன் இப்படி பேசியிருப்பது மேற்கொண்டு இந்த வாதத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: ஆனால் கலாநிதி மாறன் பேசியதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, 'ஆயிரம் கோடி் வசூல் போஸ்டர் ஏற்கனவே ரெடியாக இருக்கு போல' என குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் இன்னொரு ட்வீட்டில், "கூலி ட்ரைலரின் இறுதியில் காக்கா சத்தத்தை பார்த்து அதை கலாய்ப்பது போல நடித்துள்ளார் தலீவர்.‌ அதற்கு முன்பு வரும் வசனத்திலும் விஜய்யை சீண்டியுள்ளார்.

முதல் ஆளாக: 'இந்த தேவாவை பத்தி தெரிஞ்சிருந்தும் எங்கிட்டயே விளையாடி இருக்க' என்பதுதான் அந்த வசனம். விஜய் மீதான‌ கோவமும், எரிச்சலும்,;பயமும் தெளிவாக தெரிகிறது.தேர்தலில் விஜய் ஜெயித்தாலும் இவருக்கு பிடிக்காது. மீண்டும் நடிக்க வந்தாலும் இவருக்கு பிடிக்காது. செமத்தியாக Check and mate வைத்துள்ளார் விஜய். இதையெல்லாம் பார்த்தால் அவர்தான் கழுகு‌. இவர்தான் காக்கா.இனியாவது இப்படி புலம்பறதை நிறுத்துங்க தலீவரே" என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்களோ ரஜினி படம் வந்தாலே கலாய்ப்பதற்கு ப்ளூ சட்டை மாறன் முதல் ஆளாக வந்துவிடுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X