Blue Sattai Maran Review: லால் சலாம் தோல்விக்கு ரஜினி தான் காரணம்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஒரு படம் ஃபிளாப் ஆகுதுன்னா படம் வெளியான பின்னர் தான் தெரியும். ஆனால், இந்த படம் ஃபிளாப் இந்த படத்தோட ரிலீசுக்கு முன்பே முடிவு ஆகிடுச்சு, அதற்கு காரணம் ரஜினிகாந்த் தான் என தனது லால் சலாம் விமர்சனத்தில் ரஜினிகாந்தை மட்டும் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமைய்யா, லிவிங்ஸ்டன், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா, கபில் தேவ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லால் சலாம் படம் வெளியானது.

Blue Sattai Maran trolls Rajinikanth and his Lal Salaam movie in his review


சொதப்பிய ரஹ்மான்: அயலான் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்திலும் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஜலாலி பாடல் மட்டும் ரஜினிகாந்துக்காக போடப்பட்டது பரவாயில்லை ரகம் தான் என்றும் அனிருத் ஜெயிலர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் '3’ படத்தில் ஒட்டுமொத்த ஆல்பத்தையே ஹிட் ஆல்பமாக கொடுத்தது போல ஏ.ஆர். ரஹ்மான் கொடுக்கவில்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷை பிரிந்து மீண்டும் இயக்குநர் ஆன நிலையில், அவரது முதல் படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இசை வெளியீட்டு விழாவில் இந்த படம் தேசிய விருது வாங்குற கதை என ஐஸ்வர்யா சொன்னதாக ரஜினிகாந்த் பேசியிருந்தார். ஆனால், படம் வெளியான பின்னர், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என விமர்சகர்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில், படத்தை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

90 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம்: 90களில் நடக்கும் பீரியட் படம் போல இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக காட்டுகின்றனர். ஆனால், அதற்கான எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. படத்தை பார்த்தால் 90 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் போல உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேக்கிங்கே சரியில்லை. குறைவான பட்ஜெட்டில் ரொம்பவே மோசமாக எடுத்துள்ளனர். விஷ்ணு விஷால் சண்டைக் காட்சியெல்லாம் அடிக்கிறதும் தெரியல, அடி விழுவதும் தெரியல என கலாய்த்துள்ளார். தேர் திருவிழா மற்றும் ரஜினியின் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் தான் செலவு செய்திருப்பாங்கன்னு தோணுது என்றும் கூறியுள்ளார்.

விஷ்ணு விஷால் வேஸ்ட்: படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷாலை தான் காட்டுகின்றனர். அவர் கிரிக்கெட் விளையாடுறாரா, லவ் பண்றாரா, ஊரை காப்பாத்த போறாரா என எதுவுமே சரியா தெரியாத அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வடிவமைத்து இருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

மொக்கை வில்லன்: இந்த படத்தின் வில்லனே மேயாத மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் விவேக் பிரசன்னா தான். அவரது கதாபாத்திரம் ரொம்பவே வீக். கிளைமேக்ஸில் ரஜினிகாந்த் விவேக் பிரசன்னாவின் ஆட்களை எல்லாம் குத்தி கொலை செய்து விட்டு, கடைசியில் அவரிடம் வந்து இதுல எது யாருடைய ரத்தம்னு சொல்லு என பிரின்ஸ் படத்தில் சத்யராஜ் பண்ண காமெடியை எல்லாம் பஞ்ச் வசனமாக பேசுகிறார் என லால் சலாம் படத்தின் சோலியை முடித்துள்ளார்.

ரஜினி தான் காரணம்: படத்தின் விமர்சனத்தை சீக்கிரம் முடித்து விட்டு அதன் பின்னர் இந்த படம் வெளியாவதற்கு முன்பே தோல்வி படம் தான். அதற்கு காரணம் ரஜினி தான் என தனிப்பட்ட தாக்குதல்களை ஆரம்பித்து விட்டார். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது, ராமர் கோயிலுக்கு சென்றது என ரஜினிகாந்த் படத்திற்கு எதிராக செயல்பட்டது தான் படத்தின் தோல்விக்கு முதல் காரணம் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X