சிவாவுக்கு ரஜினி ஆப்பு வைக்கப்போறாரா?.. வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன்.. இப்படி கலாய்க்கலாமா பாஸ்
சென்னை: தமிழில் ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். யாருடைய படமாக இருந்தாலும் கிழித்து தொங்கவிடும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்; பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இருந்தாலும் தனது மனதுக்கு பட்டதை திரை விமர்சனமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஆன்டி இந்தியன் என்ற படத்தையும் அவர் இயக்கினார். இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்தையும், சிவாவையும் கலாய்த்திருக்கிறார்.
உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூட்யூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூட்யூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.
தனிநபர் தாக்குதல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
வேட்டையன் Vs கங்குவா: இதற்கிடையே அக்டோபர் 10ஆம் தேதி ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படமும், சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் வெளியாகவிருக்கின்றன. இதனால் எந்தப் படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. அதிலும் ரஜினியுடன் சூர்யா தைரியமாக மோதுகிறாரே என்ற பேச்சுக்களும் திரைத்துறையில் எழ ஆரம்பித்திருக்கின்றன. முக்கியமாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை இயக்கிய சிவாதான் கங்குவா படத்துக்கும் இயக்குநர். இதன் காரணமாக இந்தப் போட்டி மேலும் சுவாரஸ்யத்தை கிளப்பியிருக்கிறது.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: ஆனால் அண்ணாத்த படம் ரஜினிக்கு படுதோல்வியைத்தான் கொடுத்தது. இதனால் சிவாவை அப்போதே பலரும் விமர்சனம் செய்தார்கள். இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினியையும், சிவாவையும் கலாய்த்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'ஏன் தலைவரே என் படத்தோடு மோதுறீங்க என்று சிவா கேட்பதுபோலவும்; அதற்கு கார்த்திக்கு சிறுத்தை., அஜித்துக்கு விஸ்வாசம், சூர்யாவுக்கு கங்குவா எனக்கு மட்டும் அண்ணாத்தையா உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா என்று ரஜினி பதில் கூறுவதுபோலவும் மீம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த மீமை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்


Click it and Unblock the Notifications











