ரஜினிக்கு பிடித்தது இரண்டு கேரக்டர்கள்தான்.. அவங்கள கழட்டிவிட்ருவாரு.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

சென்னை: தமிழ்நாட்டில் ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். படம் நன்றாக இல்லையென்றால் சகட்டுமேனிக்கு விளாசும் அவர்; ஆன்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இது ஒருபக்கம் இருக்க நடிகர் ரஜினிகாந்த்தை தாக்கி தொடந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுவருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

பேசி பேசியே வளர்ந்த கலைதான் சினிமா என்று கோபிநாத் சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். அது ஒருவகையில் உண்மையும்கூட. பல படங்கள் விமர்சகர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றன; பல படங்கள் காணாமல் போயிருக்கின்றன. சோஷியல் மீடியா வளர்ந்த இந்தக் காலத்தில் பல விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ரொம்பவே முக்கியமானவர்தான் ப்ளூ சட்டை மாறன். அனைத்து படங்களையும் விமர்சனம் செய்பவர் அவர்.

ஓபன் டாக்தான்: அவர் விமர்சனம் செய்யும் படங்களை பல சமயங்களில் சகட்டுமேனிக்கு விளாசுவார். அதேசமயம் படம் நன்றாக இருந்தால் பாராட்டவும் தவறுவதில்லை. ஆனால் அவர் பாராட்டுவதைவிடவும் விளாசுவதுதான் அதிகம். அந்த விளாசல் சில சமயங்களில் எல்லை மீறியும் போவதுண்டு. அப்படிப்பட்ட நிலைமையில்தான் ப்ளூ சட்டை மாறன் எல்லா படங்களையும் இப்படி விமர்சனம் செய்கிறாரே; அவர் ஒரு படம் இயக்கலாமே என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.

Blue Sattai Maran Trolls Rajinikanth at Recent Tweet

ஆன்டி இந்தியன்: அதனையடுத்து ஆன்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருந்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை அப்படம் சம்பாதித்தது. ஆனால் எதிர்பார்ப்பை க்ரியேட் செய்த அளவுக்கு ரசிகர்களுடன் அந்தப் படம் கனெக்ட் ஆகவில்லை. அதனைத் தொடர்ந்து படம் எதுவும் இயக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து விமர்சனம் செய்தும், கிண்டல் செய்தும் ட்வீட் செய்வதை வழக்கமாக்கியிருக்கிறார் அவர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அந்தவகையில் அவர் ரஜினியை கிண்டல் செய்து தனது எக்ஸ் பக்கத்தில், "தலீவர் 2.0: இவருக்கு புடிச்சது ரெண்டே கேரக்டர்தான். தாதா & அதிரடி போலீஸ் அதிகாரி. காலா, கபாலி, பேட்ட, கூலி. தர்பார், வேட்டையன், ஜெயிலர், ஜெயிலர் 2. 50 வயசை தாண்டுனாலே ரிவால்வரை பிடிக்க கை நடுங்கும். ஆனா நம்ம தலைவர் 75 வயசுலயும் AK 47, PK 47 ஐ எல்லாம் அசால்ட்டா ஹாண்டில் பண்ற தாதாவா கலக்குறார்.

ரிட்டையர்டு ஆகிடுவாங்க: உண்மையான போலீஸ் எல்லாம் 60 வயசுல ரிடையர் ஆகிடுவாங்க. ஆனா இவர் 75 வயசுலயும் வில்லன் கோஷ்டியை துரத்தி துரத்தி என்கவுண்டர் பண்ணுவார். ட்யூட்டில இருந்தாலும் தாடியை எடுக்காத ஒரே போலீஸ் அதிகாரி. இவர்‌ மட்டும்தான். தலீவருக்கு இந்த LCU கதையெல்லாம் புடிக்காது. Only standalone படம்தான். படம் ஓடுனா அது தன்னால்தான் ஓடுனதா இருக்கனும்‌.

மோகன்லால், அமீர்கான் மாதிரி பெரிய நடிகர்களை இவர் படத்துல கேமியோ பண்ண வைப்பாரு‌. ஆனா இவர் அவங்க படத்துல நடிக்க மாட்டாரு. நெல்சனும, லோகேஷூம் ஒரே ஒரு ஃப்ளாப் தந்தா போதும். அத்தோட அவங்களையும் கழட்டி விட்ருவாரு" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டுக்கு ரஜினி ரசிகர்களும் கடுமையான எதிர்வினையை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X