டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை ஏமாற்றினாரா ரஜினிகாந்த்?.. ப்ளூ சட்டை மாறன் இப்படி கொளுத்தி போடுறாரே
சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி பிரபலமடைந்த அபிஷன் ஜீவிந்த் இப்போது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த மதன் என்பவர் இயக்க; ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும், எம்.ஆர்.பி என்ட்டெர்டெயின்மெண்ட்டும் தயாரிக்கிறார்கள். இன்று மாலை அப்படத்தின் டைட்டில் டீசரை ரஜினி இன்று வெளியிடும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
கோலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் முக்கியமானது டூரிஸ்ட் ஃபேமிலி. அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், பக்ஸ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்திருந்தார்கள். படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானபோது இப்படம் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 90 கோடி ரூபாய்வரை வசூலித்தது.
என்ன ஸ்பெஷல்: ஒரே வன்முறை, ரத்தம், துப்பாக்கி சத்தம் என கேட்டு கேட்டு நொந்து போயிருந்த கோலிவுட் ரசிகர்களுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி ரொம்பவே இதமாக இருந்தது. படத்தின் மேக்கிங், வசனம், நடிகர்களின் நடிப்பு, இசை என அத்தனை ஏரியாக்களும் பக்காவாக இருந்தது. முக்கியமாக நீண்ட காலம் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த திருப்தியை தந்ததாக ரசிகர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள். இதனால் ஒரே படத்தில் ஃபேமஸ் ஆகிவிட்டார் அபிஷன்.

ஹீரோவாக அறிமுகம்: ரஜினிகாந்த் உள்ளிட்டோர் எல்லாம் அவரை வெகுவாக பாராட்டியிருந்தார்கள். முதல் பட வெற்றிக்கு பிறகு அவர் அடுத்ததாக யாரை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்த சூழலில்; பெரிய ட்விஸ்ட்டாக அவரே ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த மதன் என்பவர் இயக்க; ரஜினியின் மகள் சௌந்தர்யாவும், எம்.ஆர்.பி என்ட்டெர்டெயின்மெண்ட்டும் தயாரிக்கிறார்கள்.
இன்று டைட்டில் டீசர்: அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இயக்குநராக எப்படி வெற்றி பெற்றாரோ அதேபோல் ஹீரோவாகவும் அபிஷனுக்கு நல்ல ஹிட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இன்று படத்தின் டைட்டில் டீசரை ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இந்நிலையில் அபிஷனை ரஜினிகாந்த் ஏமாற்றிவிட்டார் என்கிற தொனியில் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ப்ளூ சட்டையின் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று: டூரிஸ்ட் ஃபேமிலி பிரமாதம் கண்ணா. எனக்கு ஏத்த மாதிரி ஒன்லைன் சொல்லுங்க. 2025 December: லைன் சூப்பர். கதையை டெவலப் பண்ணுங்க. 2026 December: Changes சொல்றேன். Note பண்ணிக்கங்க 2027 December: எனக்கு இந்த கதை செட் ஆகல. ஃப்யூச்சர்ல டெஃபனட்டா வேற படம் பண்ணுவோம் கண்ணா" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ரஜினியை அட்டாக் செய்வதையே ப்ளூ சட்டை மாறன் வேலையாக வைத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











