GOAT முதல்நாள் வசூல் 126 கோடியாம்.. நல்லா வடை சுடுறாங்கய்யா.. பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது ட்வீட் போட்ட நிலையில், அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட அஜித், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா ரசிகர்கள் நல்லா வடை சுடுறாங்க என கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கோட் திரைப்படம் தமிழ்நாட்டை தாண்டி மற்ற இடங்களில் வாஷ் அவுட் என மனோபாலா விஜயபாலனும் ஆஜராகி அடித்து நொறுக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் பெயருக்கு ஏற்றவாறு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இல்லை என்றும் வேஸ்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்றும் அவர் ட்வீட் போட்டுள்ளார்.

கோட் படத்தின் வசூல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியாவில் மீண்டும் கோட் படம் தொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், கோட் படத்தின் வசூல் குறித்தும் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்தும் கம்பேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ட்ரிபிள் தளபதி ட்ரீட்: கோட் படத்தை விஜய்க்கான ஃபேர்வெல் படமாக கொடுக்க வேண்டும் என நினைத்த வெங்கட் பிரபு பக்கா பேக்கேஜ் படமாக அந்த படத்தை கொடுத்துள்ளார். காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், டெக்னாலஜி என அனைத்து விஷயங்களையும் உள்ளே வைத்து ஒன்றுக்கு 3 தளபதியை திரையில் காட்டி ட்ரீட் கொடுத்துள்ளார். காந்தி, ஜீவன் மற்றும் சஞ்சய் என விஜய் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

கோட் 2 வருமா?: தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலகப் போவதாக கூறியுள்ளார். ஆனால், கோட் படத்தின் கிளைமேக்ஸில் GOAT vs OG மோதல் என வெங்கட் பிரபு முடித்துள்ளார். லியோ படத்திலும் லியோவை எல்சியூவுக்குள் கொண்டு வந்து லோகேஷ் கனகராஜ் முடித்திருந்தார். ஆனால், அரசியலில் விஜய் எதிர்பார்க்கும் விஷயம் நடந்து விட்டால் சினிமா பக்கம் வரமாட்டார் என்றும் இல்லையென்றால், மீண்டும் ரசிகர்களுக்காக சினிமாவுக்கு வந்து இந்த படங்களை எல்லாம் பண்ணுவார் என்றும் கூறுகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: ”GOAT முதல்நாள் வசூல் 126 கோடியாம். நல்லா வடை சுடுறாங்கய்யா. நான் நம்ப மாட்டேன். - இப்படிக்கு.. ஜெயிலர் 530 கோடி.. என வடைகளை சுட்டுத்தள்ளிய... தர்பார் தனபால்.” என கோட் வசூலை ட்ரோல் செய்வது போல ஜெயிலர் வசூலையும் சேர்த்து கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

விடாமுயற்சி வரட்டும்: அட்லீஸ்ட் வடை சுட்டாவது அஜித்தை விஜய்க்கு போட்டியாளர் என சொல்லுங்கப்பா என நெட்டிசன் போட்ட ட்வீட்டுக்கு கமெண்ட் போட்ட ப்ளூ சட்டை மாறன், ”விடாமுயற்சி வரட்டும் மாப்ள. நீ வடை ஃபேக்டரி வைக்காமயா போய்டுவ?” என கமெண்ட் போட்டுள்ளார்.
குவியும் ட்ரோல்கள்: விஜய் படம் வெளியானாலே ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் குவிவது வழக்கம் தான். விஜய் படத்துக்கு மட்டுமல்ல ரஜினிகாந்த், அஜித், சூர்யா என எந்தவொரு முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களின் படங்கள் வெளியானால் இதே நிலைமை நீடிக்கத்தான் செய்யும். கோட் படம் வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்தை ட்ரோல் பண்ணி ஏகப்பட்ட ட்வீட்களும், மீம்களும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.


Click it and Unblock the Notifications











