Blue Sattai Maran: தனியா ஓடி தங்க மெடல் வாங்கலாமா தலைவரே.. ரஜினியை விடாமல் சீண்டும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இடத்தில் நடக்கும் பார் இதுதான் என்றும் ஜெயிலர் படம் சோலோ ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தால் எப்படி என தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சீண்டிக் கொண்டே இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

எதிர்வினை ஆற்றினால், அந்த பிரபலத்துடன் இறங்கி சண்டைப் போட்டு மேலும், டிரெண்டாகி விடும் ப்ளூ சட்டை மாறன் இந்த முறை அவரை யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவிட்டியை பரப்பி வருகிறார்.

ஜெயிலர் படம் எந்தவொரு பெரிய நடிகர்களின் படங்களுடன் போட்டிப் போடவில்லை என்றும் உசைன் போல்ட் தனியாக ஓடினால் தங்கம் கொடுப்பாங்களா பாஸ் என ட்ரோல் செய்து வம்பிழுத்துள்ளார்.

ரஜினிகாந்தை விடாத ப்ளூ சட்டை மாறன்: "தனியாக ஓடி தங்க மெடல் வாங்கி இருந்தால் உசைன் போல்ட்டுக்கு மரியாதை இல்லை. 'ஒவ்வொரு முறையும்' பலருடன் போட்டியிட்டு வென்றதால்தான் நம்பர் 1 என உலகம் போற்றியது.

ஆனால் தலைவரோ 10 ஆம் தேதி தனியே ஓடுவாராம். இதற்குப்பெயர் மாஸாம். கூஸ் பம்ப்ஸாம்.

பிகிலுடன் கைதியும் வெற்றி பெற்றது. பீஸ்ட்டை KGF 2 போட்டு தள்ளியது.

பொங்கலுக்கு வந்த பேட்டயை விட விஸ்வாசம் அதிக வசூலை குவித்தது.

தனியே வந்தாலும்.. தர்பார் தேறவில்லை.

Blue Sattai Maran trolls Rajinikanth for Jailer solo release

கார்த்தி, யஷ், விஜய் அல்லது அஜித்துடன் மோதியிருந்தால் தலைவர் நாக் அவுட் ஆகி இருப்பார். இந்தியன் 2 வோடு மோதினாலும் இதுதான் கதி.

எல்லா தியேட்டரையும் வளைத்து பிடித்து மாஸ் காட்டுவது வீரமல்ல. பயம். Identity crisis.

அப்பறம் என்ன..50 கோடி, 200, 300 கோடி ஃபோட்டோஷாப் போஸ்டர் எல்லாம் ரெடிதான?

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!!

ஸ்டார்ட் மியூசிக்." என ப்ளூ சட்டை மாறன் மீண்டும் ஒரு நெகட்டிவ் ட்வீட்டை போட்டு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் வரை தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவார் என்பதை உணர்த்தி வருகிறார்.

தமன்னா தான் ஜெயிச்சாங்க: ஜெயிலர் படத்தை யாருக்காக பார்ப்பீங்க என ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக் கணிப்பில் தமன்னாவுக்காக என அதிகப்படியான ரசிகர்கள் கருத்து தெரிவித்ததாக poll resultsம் போட்டு பங்கம் பண்ணியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

புஷ்பா படத்தை எப்படி ஓ சொல்றியா மாமா பாட்டு மூலம் சமந்தா காப்பாற்றினாரோ, அதே போல காவாலா பாடல் தான் ஜெயிலர் படத்தை காப்பாற்றப் போகிறது என பதிவிட்டுள்ளார்.

இதுதான் அந்த பார்: ரஜினிகாந்த் இடத்தில் தற்போது பார் ஒன்று நடப்பதாக பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது அந்த பாரின் புகைப்படத்தையும் வெளியிட்டு இதுதான் அந்த பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தை இன்னொருவருக்கு விற்று விட்ட நிலையில், அவர்கள் என்ன செய்தால், உனக்கு என்ன என ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்ற, அனைத்துக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X