Lal Salaam - லால் சலாமை காப்பாற்றுங்கள் மக்களே.. ரஜினியை பங்கமாக கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லால் சலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் அந்தப் படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன. அந்தவகையில் லால் சலாம் படத்திற்கு விளம்பரம் செய்யும் விதமாக ரஜினி ரசிகர்கள் அடித்த போஸ்டரை வைத்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாய் கலாய்த்திருக்கிறார்.

ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் லீடு ரோல்களில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர்த்து செந்தில், தன்யா உள்ளிட்டோரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் நடித்திருக்கிறார்கள். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Blue Sattai Maran Trolls Rajinikanth For Lal Salaam Movie


இசை வெளியீட்டு விழா: படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று ஐஸ்வர்யாவும், ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். நிலவரம் இப்படி இருக்க படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லால் சலாம் ட்ரெய்லர்: லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லர் படு மாஸாக வந்திருக்கிறது. முக்கியமாக ரஜினிகாந்த் வரும் இடம் எல்லாம் கூஸ் பம்ப்ஸாக இருக்கும் என்பதை படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துவருகின்றனர். மேலும் கண்டிப்பாக இந்தப் படம் சுப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

மாஸ் ரஜினிகாந்த்: முக்கியமாக ட்ரெய்லரில் ரஜினிகாந்த்துக்கு மாஸ் காட்சிகள் இருக்கின்றன. மூணாறு ரமேஷ் ஒரு இடத்தில், 'பம்பாய்ல பாய் ஆளே வேற டா’ என்று சொல்வதை பார்த்த ரஜினி ரசிகர்கள், கண்டிப்பாக படத்தில் தலைவருக்கு மாஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறிவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானும் தன்னுடைய பங்குக்கு சிறந்த இசையை கொடுத்திருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் போஸ்டர்: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் லால் சலாம் படத்திற்கு போஸ்டர் அடித்திருக்கின்றனர். அந்தப் போஸ்டரில், 'மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே’ என்று வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், “லால் சலாமை சூப்பர் ஹிட்டாக்க வேண்டுகிறார். காப்பாற்றுங்கள் மக்களே” என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது.

ரசிகர்களும் கிண்டல்: ப்ளூ சட்டை மாறன் மட்டுமின்றி ரசிகர்களில் ஒருதரப்பினரும் இந்த விவகாரத்தை வைத்து சமூக வலைதளங்களில் நக்கல் செய்துவருகின்றனர். அதாவது, லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினிகாந்த் சனாதனத்தையும், வேதங்களையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதனை குறிப்பிட்டிருக்கும் சிலர், “ரஜினிகாந்த் வலதுசாரி சிந்தனையுடையவர் என்பது அந்தப் பேச்சின் மூலமே உறுதியாகிவிட்டது. அதனை அவரது ரசிகர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் இப்போது மும்மதமும் முதல் மதமே” என்று எதற்காக போஸ்டர் அடிக்கிறார்கள் என்று விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X