ரஜினியின் ராஜ தந்திரம் வீணாகிப்போனது.. விஜய் மீது அவருக்கு காண்டு.. ப்ளூ சட்டை மாறன் ஓபன் டாக்

சென்னை: ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். அவரது திரை விமர்சனத்தில் நக்கல்களும், நையாண்டிகளும் அவ்வளவு இருக்கும். சில சமயங்களில் அவை ஓவர் டோஸாகவும் சென்று சர்ச்சைகளையும் சந்தித்ததுண்டு. விமர்சனம் மட்டுமின்றி நடிகர்கள் குறித்தும் தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை அவர் வைப்பார். இதனால் பல நடிகர்களின் ரசிகர்களுக்கு அவரை கண்டாலே ஆகாது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் குறித்த விமர்சனத்தை மீண்டும் வைத்திருக்கிறார் அவர்.

திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. அவரது திரை விமர்சனம் அவ்வளவு வெளிப்படையாக இருக்கும். நல்ல படங்களை அவர் கொண்டாடியதற்கும் தவறியதில்லை. அதேசமயம் ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அதனை வைத்து செய்துவிடுவார் அவர். அது சில சமயம் ஓவர் டோஸாகி அவர் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவ்வளவு பேசும் அவர் படம் எடுக்க வேண்டியதுதானே என்று ஒருதரப்பினர் கூறினார்கள்.

ஆண்டி இந்தியன்: நிலைமை இப்படி இருக்க் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார் அவர். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். மேலும் பேசுவது எளிது படம் எடுப்பது கஷ்டம் என்பதை இப்போதாவாது ப்ளூ சட்டை புரிந்துகொண்டிருப்பார் என்றும் கூறினார்கள். இதற்கிடையே அவர் உருவ கேலியையும் செய்துவந்தார். அது கண்டனத்தை பெற்றதையடுத்து அந்த மாதிரியான கேலிகளை அவர் நிறுத்திவிடார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blue Sattai Maran Trolls Rajinikanth For Vijay Political Entry

நடிகர்களையும் சம்பவம்: திரைப்படங்களை மட்டுமின்றி நடிகர்களையும் விமர்சனம் செய்வது வழக்கம். நடிகர்கள் யாரேனும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட்டாலோ, கருத்துக்களை தெரிவித்தாலோ தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்களை வைத்து செய்துவிடுவார். இதன் காரணமாக நடிகர்களின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு. சூழல் இப்படி இருக்க இந்த வருடம் அவர் எந்த திரை பிரபலங்களுடன் வம்புக்கு சென்றார் என்பதை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் மீது விமர்சனம்: ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினியை கண்டாலே ஆவதில்லை. ஜெயிலர் பட சமயத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த்தை வம்பிழுத்துக்கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன், இப்போது மீண்டும் ரஜினிகாந்த்தை அட்டாக் செய்திருக்கிறார். அதாவது பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "விஜய்யை வீழ்த்த அண்ணாமலையுடன் கைகோர்த்த தலீவர்

Take a Poll

ரஜினி பதறினார்: நாம் முன்பே சொல்லி வந்தது போல சினிமா வியாபாரத்தில் தன்னை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய் மீது தலீவருக்கு நீண்டகாலமாக காண்டு உண்டு.அதனால்தான் காக்கா, கழுகு கதை சொல்லி கதறினார். என் பட்டத்தை பறிக்க நூறு பேரு என பதறினார். இதுபோக வரும் தேர்தலில் விஜய் வெற்றிபெற்றுவிட்டால் தலீவரால் சத்தியமாக தாங்கிக்கொள்ளவே இயலாது எனவும் குறிப்பிட்டிருந்தோம்.

இதோ.. தற்போது தனது குள்ளநரி தந்திர வேலைகளை ஆரம்பித்து விட்டார் தலீவர். அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பதன் பின்னணியில் தலீவர் உள்ளதாக தமிழா பாண்டியன் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு.. தமிழகத்தை ஆள ஒரு இளைஞர் வரப்போகிறார் என தலீவர் குறிப்பிட்டார். அதன்பிறகு பாஜகவின் தலைவரானார் அண்ணாமலை. தற்போது.. பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு.. தலீவருக்கு பிடித்த இமயமலை பாபா குகையில் அண்ணாமலை வழிபட்ட ஃபோட்டோ வெளியானது. இவர் தனிக்ட்சி ஆரம்பித்து ஓரளவு வாக்கு வங்கி பெற்றதும்.. மீண்டும் பாஜகவில் இணைந்து விடுவார்‌. இதுதான் தலீவரின் மாஸ்டர் ப்ளான்.வழக்கம்போல தலீவரின் இந்த ராஜதந்திரமும் வீணாகப்போவது உறுதி' என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X