"வானுயர் தோற்றம் எவன்செய்யுந்".. திருக்குறளை போட்டே ரஜினிகாந்தை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ப்ளூ சட்டை மாறன் திருக்குறளை பதிவிட்டு ரஜினியை கிண்டல் செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் வயதையும், யோகி ஆதித்யநாத் வயதையும் குறிப்பிட்டு முன்னதாக ட்வீட் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் தற்போது இரு திருக்குறள்களை உதாரணமாக காட்டி பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

Blue Sattai Maran trolls Rajinikanth for Yogi Adithyanath feet touching issue

கடந்த ஒரு மாத காலமாகவே ரஜினிகாந்தையும் ஜெயிலர் படத்தையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறனை திட்டிய பலரும் தற்போது ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

காலில் விழுந்த காலா: "கடந்த சில வாரங்களாக கபாலிக்கு சொம்பு தூக்கிய திருப்பூர் சுப்பு, செய்யாறு OLA, ரமேஷ் பாலா, பணஞ்செயன் மற்றும் திரையுலக அட்டகத்திகளை, மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுத்த செய்தி மற்றும் Youtube. சேனல்களே..

இவர்களை மீண்டும் பேட்டியெடுங்கள். 'காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள். அதற்கு அவர்கள் எப்படி ஈயம் பூசுகிறார்கள் என்பதை உலகம் பார்க்கட்டும்.

எனது புகைப்படத்தை Thumbnail ஆக வைத்து 'ப்ளூ சட்டையை கிழித்த' என்று பல்வேறு வீடியோக்கள் போட்டு வஞ்சத்தை தீர்த்தீர்களே? அதுதானா உங்கள் சேனல்களின் தரம்?

நன்கு யோசியுங்கள்.

என்னை கரித்துக்கொட்டி, கெட்ட வார்த்தை பேசும் டம்மி பீஸ்களின் பேட்டிகளால்.. நான் 1% கூட அசரப்போவதில்லை.

All are waste efforts. Keep on doing this. So that your motive and guest's cheap tactics will be made public and they'll decide who is right.

கொஞ்சமாவது maturity உள்ள Anchor களை வேலைக்கு எடுங்கள். அவர்களும் ஹீரோக்களின் முரட்டு ஜால்ராக்களாக இருப்பது கண்ணியமான மீடியா தொழிலுக்கே பேரவமானம்." என பதிவிட்டு வெளுத்திருந்தார்.

திருக்குறள்களை பதிவிட்டு கடும் விமர்சனம்: "குறள் 272:

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின்.

விளக்கம்:
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.

எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படி செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்." என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக ரஜினிகாந்தின் செயலை விமர்சித்துள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்: யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை பார்த்து பல ரஜினி ரசிகர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தீவிர ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் ட்ரோலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத் துறவி என்பதால் தான் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார் மற்றபடி எந்தவொரு அரசியல் ஆசையும் இல்லை என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X