twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது பெல்ஜியம் ஸ்டீல் ஃபேக்டரி முருகேஸா.. ஜெயிலர் போஸ்டரையும் விடாமல் வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!

    |

    சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என அதிகாரப்பூர்வமாக டைட்டில் லுக் போஸ்டருடன் வெளியிட்டனர்.

    வழக்கமாக இதுபோன்ற டைட்டில் லுக் போஸ்டர்கள் வந்தால், அது எங்கே இருந்து சுடப்பட்டது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து போட்டு விடுவார்கள்.

    அதே போன்ற ஒரு சிக்கலில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் சிக்கி உள்ளது. அதை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    கமலுடன் இணைகிறாரா அயலான் இயக்குநர்.. வாழ்வின் பரவசம்னு அவர் சொல்லியிருக்கறத பாருங்க! கமலுடன் இணைகிறாரா அயலான் இயக்குநர்.. வாழ்வின் பரவசம்னு அவர் சொல்லியிருக்கறத பாருங்க!

    ஜெயிலர் டைட்டில் லுக்

    ஜெயிலர் டைட்டில் லுக்

    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என அதிகாரப்பூர்வமாக டைட்டில் லுக் போஸ்டருடன் வெளியிட்டனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்க உள்ளார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரஜினி சம்பளம்

    ரஜினி சம்பளம்

    அண்ணாத்த படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இந்த படத்துக்கு அவருக்கு அதிகப்படியாக 151 கோடி ரூபாயை சம்பளமாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய், அஜித்தை எல்லாம் ஓவர் டேக் செய்து இந்தியாவிலேயே அதிகளவில் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

    பெல்ஜியம் ஸ்டீல் மில்

    பெல்ஜியம் ஸ்டீல் மில்

    படத்தின் டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் வந்தால், இது எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என நெட்டிசன்கள் உடனடியாக கண்டுபிடித்து அதனை ஷேர் செய்து டிரெண்ட் செய்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், கூகுளில் இருந்து பெல்ஜியம் ஸ்டீல் மில்லின் புகைப்படத்தை எடுத்து அதில் அரிவாள் ஒன்றை ரத்தக் கறையுடன் தொங்க விட்டு ஜெயிலர் டைட்டிலை உருவாக்கி விட்டனர் என விஜய் ரசிகர்கள் கண்டு பிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

    ப்ளு சட்டை மாறன் ட்ரோல்

    ப்ளு சட்டை மாறன் ட்ரோல்

    அதை அப்படியே ஷேர் செய்த இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் விஜய் ரசிகர் கண்டுபிடித்தது என courtesy போட்டு டைட்டில் லுக் டிசைன் இங்கிருந்து தான் சுடப்பட்டது. ரஜினி போன்ற உச்ச நட்சத்திரத்தின் படத்திற்கு கூட தனியாக ஒரு பிரத்யேக ஷூட் வைத்து டைட்டில் லுக் டிசைன் செய்யவில்லை என்கிற ரீதியில் ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    English summary
    Rajinikanth's Jailer title look poster design copied from Belgium Steel Mill photo took by google and Jailer title design photo done by team trolls shared by Blue Sattai Maran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X