”சூப்” ஸ்டார் என சர்ச்சை ட்வீட்.. ஷாக் அடித்தவரை ஏன் போய் பார்க்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: சூப்பர் ஸ்டார் என இந்திய ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்தை "சூப் ஸ்டார்" என படுமோசமாக விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
எக்ஸ் சூப்பர்ஸ்டார் என பத்திரிகையாளர் பிஸ்மி பேசிய பேச்சைக் கேட்டு கொதித்தெழுந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், இந்த முறை ப்ளூ சட்டை மாறன் வீட்டுக்கு படையெடுப்பார்களா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சூர்யாவுக்கு இருக்குற அக்கறை கூட ரஜினிகாந்துக்கு இல்லை என்றும் மின்சாரம் தாக்கி பாதித்த தொழிலாளரை மருத்துவமனைக்கு சென்று ரஜினிகாந்த் சந்திக்காததற்கு இதுதான் காரணம் என அவர் போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மின்சாரம் தாக்கிடுச்சு: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில ஊழியர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கி விட்டதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ப்ளூ சட்டை மாறன் முன்னதாக ட்வீட் போட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த நபரை ரஜினிகாந்த் ஏன் போய் பார்க்கவில்லை என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
சூர்யாவாச்சும் பரவால: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திராவில் கட் அவுட் கட்டிய ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலமாக சூர்யா போன் செய்து தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து இருந்தார்.
அந்த அளவுக்கு கூட ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை என ப்ளூ சட்டை மாறன் விடாது ரஜினியை வச்சி செய்வது என்கிற முடிவில் தொடர்ந்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகிறார்.

லியோவுக்குத் தான் எதிர்பார்ப்பு: தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக் கணிப்பில் லியோ, ஜெயிலர், இந்தியன் 2 மற்றும் கங்குவா உள்ளிட்ட படங்களில் எந்த படத்துக்கு அதிக வசூல் வரும் என கேட்டிருந்தார்.
அதற்கு அதிகப்படியான வாக்குகள் லியோவுக்குத் தான் வந்தது என்றும் நடிகர் விஜய் நம்பர் ஒன், கமல் நம்பர் 2, அஜித் நம்பர் 3 மற்றும் நம்பர் 4ல் தான் ரஜினி என இன்னொரு ட்வீட்டும் போட்டுள்ளார்.

சூப் ஸ்டார்: வெஜ் க்ளியர் சூப் படத்தை போட்டு சூப்பர்ஸ்டாரை சூப் ஸ்டார் என படுமோசமாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரை மருத்துவமனைக்கு சென்று ரஜினி பார்த்தாலும், யாரு நீங்கன்னு கேட்டு விட்டால் என்ன பண்றது, அதுக்குத்தான் போகல போல என கலாய்த்துள்ளார்.
இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினிகாந்தை தாக்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் அதற்கு தக்க பதிலடியை கொடுக்கப் போவதாக கொதித்தெழுந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











