அமிதாப்புக்கு பிரகாஷ் ராஜ் வாய்ஸ்.. கைய கொடுங்க சகல.. வேட்டையனை வேட்டையாடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: வேட்டையன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த் ஏகப்பட்ட விஷயங்களை விழாவில் பேச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதேபோல் படத்தின் டீசரும் நேற்று வெளியிடப்பட்டது. அதுவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. சூழல் இப்படி இருக்க பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் டீசரை வைத்து தொடர்ந்து ட்விட்டரில் கலாய்த்துவருகிறார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. மனசிலாயோ என்ற அந்தப் பாடல் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகின்றன என்பது குறித்த தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜெய்பீம் இயக்குநருடன் ரஜினி முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இது ஞானவேல் ஸ்டைலில் இருக்குமா இல்லை ரஜினி ஸ்டைலில் இருக்குமா என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டும் கலந்த கலவை: சூழல் இப்படி இருக்க வேட்டையன் படத்தின் டைட்டில் இண்ட்ரோ வீடியோ வெளியானது. அதில் குறி வெச்சா இரை விழணும் என்ற பஞ்ச் இடம்பெற்றிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைலில் உருவாகியிருக்குமோ என்று சந்தேகம் கிளப்பினர். ஆனால் அப்படி இல்லை ரஜினிக்காக சில போர்ஷன்கள் கமர்ஷியலாக இருக்கின்றன. அதேசமயம் ஞானவேல் தனது பாணியையும் இதில் விடவில்லை. உண்மையாக நடந்த போலி என்கவுன்ட்டரை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ரஜினிகாந்த் தனது பகுதிக்கான டப்பிங்கை அண்மையில் முடித்தார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டப்பிங்கின்போது ஒரு காட்சியை பார்த்துவிட்டு இயக்குநரை ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

ஆடியோ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆடியோ ரிலீஸில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. டீசரை பார்க்கையில் படம் கமர்ஷியலாகவும், சமூக அக்கறையுடனும் உருவாகியிருப்பது தெரிகிறது. படத்தில் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அதனை வைத்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

அதன்படி ஒரு ட்வீட்டில் அமிதாப் சாருக்கு பிரகாஷ்ராஜ் டப்பிங் ஐடியா... பிரமாதம்.. என்று ரன் படத்தில் காக்கா பிரியாணி சீனில் விவேக் தோன்றும் ஃபோட்டோவை பகிர்ந்து கலாய்த்திருக்கும் அவர்; அதற்கு முந்தைய ட்வீட்டில் கையை கொடுங்க சகல என்று ஞானவேலுவிடம் சூர்யா சொல்வது போன்று வடிவேலு புகைப்படத்தை போட்டு கலாய்த்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வேட்டையனை ப்ளூ சட்டை இப்போவே வேட்டையாட ஆரம்பிச்சிட்டாரே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X