இந்தி படத்தை கெடுத்த ஆர்ஜே பாலாஜி.. தியேட்டர் காத்து வாங்குது.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

சென்னை: வீட்ல விசேஷம் படத்தின் புரமோஷன்களில் டேய் பச்சை சட்டை என ஆர்ஜே பாலாஜி கலாய்த்து வந்தார்.

Recommended Video

RJ Balaji | Blue Sattai Maran-க்கு சரியான பதிலடி! *Kollywood

இந்நிலையில், வீட்ல விசேஷம் படத்தை ஆர்ஜே பாலாஜி சரியாக இயக்கவில்லை என்றும் ஒரு அழகான பாலிவுட் படத்தை கெடுத்து விட்டார் என்றும் விளாசி உள்ளார்.

மேலும், தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கவும் ஆர்ஜே பாலாஜி தவற விட்டு விட்டார் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார்.

வீட்ல விசேஷம் வசூல்

வீட்ல விசேஷம் வசூல்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் குறைவான தியேட்டர்களில் மட்டுமே தமிழ்நாட்டில் வெளியானது. அதிகப்படியாக முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தலா ஒன்றரை கோடி வரை வசூல் செய்த அந்த படம் திங்கட்கிழமை முதல் டல் அடித்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மொத்தமாக 4 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

பச்ச சட்டை

பச்ச சட்டை

ப்ளூ சட்டை மாறனை கலாய்க்கும் விதமாக டேய் பச்சை சட்டை என ஆர்ஜே பாலாஜி படத்தின் புரமோஷன்களில் பயன்படுத்தி வந்தார். ஏற்கனவே பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பிரச்சனை உள்ள நிலையில், ஆர்ஜே பாலாஜி தன்னை வைத்துத் தான் ட்ரோல் செய்கிறார் என்பதை புரிந்து கொண்ட ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்திற்கு சோஷியல் மீடியா பிரபலங்கள் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறினர். ஆனால், மக்களை பெரும் அளவில் தியேட்டருக்கு கொண்டு வர அந்த படம் தவறிவிட்டது. இந்நிலையில், தனது விமர்சனத்தில் வீட்ல விசேஷம் படத்தை வச்சு விளாசித் தள்ளி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

காத்து வாங்குது

காத்து வாங்குது

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு ட்வீட்டையும் போட்டு ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். தியேட்டர்கள் ஆளில்லாமல் காத்து வாங்குவதாகவும், பல தியேட்டர்களில் மிகவும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தி படத்தை கெடுத்துட்டாரு

இந்தி படத்தை கெடுத்துட்டாரு

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான பதாய் ஹோ படத்தின் ரீமேக்காக வெளியான வீட்ல விசேஷம் அந்த ஒரிஜினல் படத்தை முழுவதுமாக கெடுத்து விட்டது என்றும், ஆர்ஜே பாலாஜியின் இயக்கம் மக்களை தியேட்டருக்கு அழைத்து வர முற்றிலுமாக தவறவிட்டதாகவும், இதுவொரு ஃபிளாப் படம் என்றும் பந்தாடி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X