Blue Sattai Maran: விஜய் ரசிகர்களை முந்திய சல்மான் கான் ஃபேன்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட பக்கா ட்வீட்!
சென்னை: தியேட்டர் சீட்களை அடித்து நொறுக்கி விஜய் ரசிகர்கள் அலப்பறை செய்ததை விட தீபாவளியன்று டைகர் 3 படம் வெளியான நிலையில், தியேட்டருக்குள்ளே பட்டாசு வெடித்து ரசிகர்கள் செய்த அட்டகாசத்தை கம்பேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார்.
தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடிப்பது, செண்டை மேளம், டிஜே வைப்பது என ரசிகர்கள் செய்யும் கொண்டாட்டங்களிலேயே ஏகப்பட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன.

இந்நிலையில், தியேட்டருக்குள் அதை விட மோசமான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
ரோகிணி தியேட்டர் சூறையாடல்: லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டத்திற்கு போலீஸார் வெளியே அனுமதி தராத நிலையில், தியேட்டருக்குள் ரசிகர்களை அனுமதித்ததன் விளைவு ஒட்டுமொத்த தியேட்டர் இருக்கைகளையும் காட்டுமிராண்டித் தனமாக விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கிய அதிர்ச்சி சம்பவம் பதற வைத்தது.
தியேட்டருக்குள் தீபாவளி: இந்நிலையில், அதை விட மோசமாக சல்மான் கான் ரசிகர்கள் கடந்த 12ம் தேதி வெளியான டைகர் 3 படத்தை கொண்டாடும் விதமாக தியேட்டருக்குள்ளே பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: "கமாண்டர்: எங்க பசங்க யாரு தெரியுமா? ட்ரைலர் பாக்கும்போது தியேட்டர் சீட் எல்லாத்தையும் ஒடச்சி போக்கிரி பொங்கல் வக்கிறவங்க.

டைகர்: அவ்வளவுதான? எங்க பசங்க படம் பாக்கும்போது பட்டாசு வெடிச்சி தியேட்டரையே கொளுத்தறவங்கடா என் சிப்ஸூ. என்ன பாக்கற...?" என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார்.
வெடிகுண்டே வைத்த ரசிகர்கள்: இதெல்லாம் என்ன பிரம்மாதம் எங்க கேப்டன் விஜயகாந்த் படம் ரிலீஸான சமயத்தில் ஒரு தியேட்டரில் நாட்டு வெடிகுண்டையே வைத்து வெடித்ததாக விஜயகாந்தின் மகனே சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹீரோ வொர்ஷிப்பை கடை பிடித்து வரும் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பதை எல்லாம் தியேட்டருக்கு வெளியே செய்வதை மீறி தியேட்டர் உள்ளேயும் செய்து மற்ற ரசிகர்களுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











