Vijay: 100.. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சமுத்திரக்கனி சொன்னதை கலாய்க்கிறாரா ப்ளூ சட்டை மாறன்?

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்கின்றேன் என்ற அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழ் திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. நாளுக்கு நாள் மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களைக் கடந்து பொது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து சமுத்திரக்கனி கூறியதை பகிர்ந்து அதற்கு கமெண்ட்டும் இட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் ஒருகட்டத்திற்கு மேல் அரசியலை மைய்யப்படுத்திய கதைகளில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக கத்தி, மெர்சல் போன்ற படங்களில் இவர் பேசிய வசனங்கள் அரசியல் தளத்தில் எதிரொலித்தது. சர்கார் படத்தில் அதிமுகவை மறைமுகமாக தாக்கி படம் எடுத்துள்ளனர் என இப்போது வரை விமர்சிப்பவர்கள் உண்டு. இப்படியான நிலையில் இவர் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது. மேலும் இது தொடர்பாக அவரிடம் பூசி மொழுகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாகவே பதில் அளித்து வந்தார்.

blue sattai maran samuthirakani thalapathy vijay

இந்நிலையில் கடந்த ஆண்டு தனது பிறந்த நாளுக்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ- மணவியர்களை அவர்களின் பெற்றோரோடு நேரில் வரவழைத்து கல்வி உதவித் தொகை வழங்கினார். இப்படியான நிலையில் இவர் அரசியலுக்கு வரப்போகின்றார் என அனைவரும் பேசத் தொடங்கினர். தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர் இருந்தே அரசியல் தலைவர்கள் பலருக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வந்தார்.

blue sattai maran samuthirakani thalapathy vijay

அதிர்ச்சி: இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது ரசிகர் மன்றத்தினை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. மேலும் அந்த அறிவிப்பின்போது தான் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகப்போவதாகவும் அறிவித்தார். இது திரைத்துறையினர் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் விஜய் அந்த முடிவில் இப்போது வரை உறுதியாக இருக்கின்றனர்.

blue sattai maran samuthirakani thalapathy vijay

சமுத்திரக்கனி : இப்படியான நிலையில் நடிகர் சமுத்திரக்கனி நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஒருமுறை, நடிகர் விஜய் தொடர் தோல்விகளுக்குப் பின்னர் அரசியலுக்கு வரவில்லை, பட வாய்ப்புகள் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு வருகின்றேன் எனக் கூறுகின்றார். இதைச் சொல்ல ஒரு தைரியம் வேண்டும். இப்போதும் அவரது படத்தினைத் தயாரிக்க 100 தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர் என பேசியிருந்தார்.

blue sattai maran samuthirakani thalapathy vijay

ப்ளூ சட்டை மாறன்: சமுத்திரக்கனி பேசியது தொடர்பான செய்தித் துணுக்கினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், அதற்கு '100' என கேப்ஷனும் இட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் ப்ளூ சட்டை மாறன் விஜய்யைக் கலாய்க்கும் விதமாக இப்படி பதிவிட்டுள்ளார். இது எல்லாம் எல்லைமீறிய கமெண்ட் எனவும், இது நாகரீகமான செயல் இல்லை எனவும் சிலர் பேசி வருகின்றனர். சிலரோ, சமுத்திரக்கனி பேசியதில் மிகவும் ஹைலைட்டான விஷயம் 100 தயாரிப்பாளர்கள் என்பதுதான். அதனால்தான் ப்ளூ சட்டை மாறன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் எனக் கூறியுள்ளனர்.

blue sattai maran samuthirakani thalapathy vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X