சரத்குமார் 150 வருஷம்.. ஜாகுவார் 200 வருஷம்.. சபாஷ் சரியான போட்டி.. ப்ளூ சட்டை மாறன் கிண்டல்!
சென்னை: சண்டை பயிற்சி இயக்குநர் ஜாகுவார் தங்கம் சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுடன் போகர் சித்தர் தினமும் உறங்குவதாகவும் தான் 200 வருடங்கள் வாழ்வேன் என அவர் சொன்னதாகவும் பேசியிருப்பதை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன் கூடவே ஏற்கனவே இதே போல ஒரு உருட்டு உருட்டிய சரத்குமாரையும் சேர்த்து கலாய்த்துள்ளார்.
புதிய படங்களை விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், சோஷியல் மீடியாவில் சினிமா பிரபலங்களையும் சேர்த்து விமர்சனம் செய்தும் ட்ரோல் செய்தும் வம்பிழுத்து வருகிறார்.

சில நேரங்களில் சினிமா பிரபலங்கள் பேசுவது காமெடி தொனியில் இருந்தால் உடனடியாக சாட்டையை சுழற்றி கலாய்த்து தள்ளி விடுகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வரிசையில் தற்போது, சரத்குமார் மற்றும் ஜாகுவார் தங்கத்தை கலாய்த்துள்ளார்.
ஆன்டி இண்டியன் இயக்குநர்: தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் புதிய படங்களுக்கு விமர்சனம் அளித்து வரும் ப்ளூ சட்டை மாறன். ஆன்டி இண்டியன் என்கிற படத்தையும் இயக்கினார். சமூக அவலங்கள் மற்றும் அரசியலை நய்யாண்டி செய்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. அதை வைத்து ப்ளூ சட்டை மாறனையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ஆனால், அதை பற்றி எல்லாம் கண்டுக்காமல் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பிரபலங்களுடன் அடிக்கடி வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
பிரபலங்களுடன் சண்டை: பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, விஜய் ஆண்டனி என ஏகப்பட்ட பிரபலங்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என ஒருவரையும் விடாமல் பாரபட்சமின்றி கலாய்த்து வருகிறார். தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ஜாகுவார் தங்கத்தை சீண்டும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
ஜாகுவார் 200, சரத்குமார் 150: சண்டை பயிற்சி இயக்குநர் ஜாகுவார் தங்கம் தன்னுடன் போகர் சித்தர் தினமும் உறங்குவதாகவும், இரவு அவருக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் வைப்பேன். காலையில், காலியாக இருக்கும். அடிக்கடி வீட்டில் உள்ளவர்களும் அவரை பார்த்துள்ளதாக கூறியுள்ளனர். நான் 200 வருஷம் வரை ஆரோக்கியமாக வாழ்வேன் என அவர் கூறியதாக ஜாகுவார் தங்கம் சொன்னதை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன், அடுத்ததாக தன்னை சிஎம் ஆக்கினால் 150 வருஷம் வரை வாழும் ரகசியத்தை சொல்வேன் என சரத்குமார் பேசியதையும் கோர்த்து விட்டு கலாய்த்துள்ளார்.


நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்: அடுத்து ஒருத்தன் 300 வருஷம்னு சொல்லப் போறான் என்றும், பாக்ஸ் ஆபிஸ் உருட்டுகளை விட இது பெரிய உருட்டாக இருக்கிறதே என்றும் சரி, சரி வண்டியில ஏறுங்க பேசிட்டே போவோம் என மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றும் காட்சியின் டெம்ப்ளேட் உள்ளிட்டவற்றை போட்டு நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டுக்கு கீழ் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











