சத்யராஜூங்கறது உங்க பேரு.. புரட்சித்தமிழனுங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா?.. ப்ளூ சட்டை வம்பு!
சென்னை: சினிமா விமர்சனத்தை விட்டு விட்டு சினிமா நடிகர்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன். ரஜினிகாந்த், விஜய், சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் எல்லாம் காவிரி விவகாரம் தொடர்பாக என்ன செய்தார்கள் என வரிசையாக ட்வீட்களை போட்டு கேட்டு வருகிறார்.
விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 வாரங்கள் இல்லாத நிலையில், இப்போதைய ஹாட் கன்டென்ட்டான காவிரி பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

நடிகர் சத்யராஜ் இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாள் என்றும் பாராமல் சத்யராஜையும் அமைதிப்படை பன்ச் வைத்து பொளந்துக் கட்டி உள்ளார்.
திடீர் போராளிகள்: ஒரு பிரபலம் குரல் கொடுத்து விட்டால் சினிமா நடிகர்கள் திடீர் போராளிகளாக மாறி சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வீர முழக்கமாக பேசுவார்கள். ஆனால், அதன் பின்னர் தங்கள் பிழைப்பை பார்க்க ஓடி விடுவார்கள். காவிரி விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது என கம்பி நீட்டி விட்டு கேரளாவில் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஜினிகாந்தே பறந்து விட்டார். ஆடியோ லான்ச் நடத்தவே முடியலை, இதில் காவிரியில் இருந்து தண்ணியை விஜய் கில்லி படத்தில் வசனமாக மட்டும் வைத்து சந்தோஷப்படலாம் என்றும் கிண்டல்கள் குவிந்து வருகின்றன.

நடிகர்களுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன்: ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ், கார்த்தி என ஏகப்பட்ட சினிமா நடிகர்கள் காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என ப்ளூ சட்டை மாறன் வரிசையாக ட்வீட் போட்டு நடிகர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு விளாசி வருகிறார்.

அமைதிப்படை அமைதியா இருக்கே: அமைதிப்படை டைட்டில் சத்யராஜ் உள்ளிட்ட சினிமா நடிகர்கள் அனைவருக்கும் கச்சிதமாக பொருந்துகிறது. எல்லாருமே சொல்லி வச்சது போலவே அமைதியா இருக்காங்களே என கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் ஒரு படி மேலே சென்று, "சத்யராஜூங்கறது உங்க பேரு. புரட்சித்தமிழனுங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா?" என விளாசியுள்ளார்.

புரட்சி தமிழன் பெயர் வைத்துக் கொண்டு புரட்சியாக காவிரி விவகாரத்தில் தலையிடாமல் அமைதியாக இருக்கீங்களே என பிறந்தநாள் தினம் என்றும் பார்க்காமல் சத்யராஜை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











