லட்டு பத்தி கருத்து சொல்லலையா?.. சத்யராஜை சண்டைக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. எதுக்கு?

சென்னை: லட்டு பிரச்சனை கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நடிகர் கார்த்தி லட்டு பற்றி பேசினாலே சிக்கல் உண்டாகும் எனக் கூறியதற்கே ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரினார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இடையே லட்டு தொடர்பான பெரிய பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே பரிதாபங்கள் டீம் லட்டு பாவங்கள் வீடியோவை போட்டு டெலிட் செய்தாலும் பாஜக கண்ணில் சிக்கிய நிலையில், பல நாட்களாக பரிதாபங்கள் டீமை வச்சு செய்ய நினைத்துக் காத்துக் கொண்டிருந்த அவர்கள் புகாரையும் அளித்துள்ளனர்.

blue sattai maran sathyaraj laddu

லட்டு விவகாரத்தில் கார்த்தி மன்னிப்புக் கேட்டது தவறான செயல் என தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது நடிகர் சத்யராஜையும் இந்த லட்டு சண்டையில் இழுத்து வேடிக்கை பார்த்து வருகிறார்.

சத்யராஜை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்: 'ஏம்பா...முன்ன எல்லாம் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை வந்தா தம் கட்டி சவுண்ட் விடுவ. அதிரடியா நாத்திகம் பேசுவ. இப்ப ஏன் சைலன்ட் ஆகிட்ட? லட்டு பத்தி கருத்து சொல்லலையா?'

'இப்ப நான் பான் இண்டியா நடிகர். குறிப்பா தெலுங்குல. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டேன்' என ட்வீட் ஒன்றை போட்டு லட்டு விவகாரத்தில் சத்யராஜையும் இழுத்து விட பார்த்துவிட்டார் ப்ளூ சட்டை மாறன்.

நடிப்பில் பிஸி: இந்தியில் சல்மான் கானின் சிக்கந்தர், தமிழில் ரஜினிகாந்தின் கூலி என நடிப்பில் படுபிஸியாக உள்ளார் நடிகர் சத்யராஜ். டோலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் வெப்பன் ஹீரோ சத்யராஜை ப்ளூ சட்டை மாறன் லட்டு விவகாரத்தில் கருத்து ஏதும் சொல்லவில்லையா எனக் கேட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை ஏம்ப்பா டிஸ்டர்ப் பண்றீங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

திடீர் போராளிகள்: சினிமா பிரபலங்கள் சில விஷயங்களில் திடீர் போராளிகளாக மாறி கருத்து சொல்வதும் அதன் பின்னர், சில விஷயங்களில் அப்படியே அமைதிப்படையாக மாறிவிடுவதுமாக உள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டவே ப்ளூ சட்டை மாறன் சத்யராஜை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். லட்டு பிரச்சனை தாண்டி கன்டெய்னர் பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகள் அப்கிரேட் ஆகிக் கொண்டே போவதாகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X