சினிமா, அரசியல் இரண்டிலும் வென்ற ஒரே சூப்பர் ஸ்டார்.. சீமானை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றும் அரசியலில் நாம தான் சூப்பர் ஸ்டார் என தனக்குத்தானே சீமான் பட்டம் கொடுத்துக் கொண்ட நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருக்கும் ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் காலம் காலமாக சினிமாவும் அரசியலும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தாலும், புதிதாக விஜய் கட்சித் தொடங்கினாலும் தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பார்கள், ஆமாம் நான் கூத்தாடி தான் என்று முதல் மேடையிலேயே பேச வேண்டிய சூழல் தான் இன்னமும் நிலவுகிறது.

சினிமாவில் படங்களை இயக்கியும் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தம்பி வரட்டும். அண்ணன் துணை நிற்கிறேன் என்றெல்லாம் பேசிவிட்டு, தற்போது 2 சூப்பர் ஸ்டார்களை ஒரே நேரத்தில் பார்த்து பயந்துட்டான் என விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசுவதெல்லாம் சரியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

vijay seeman blue sattai maran

2026ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஆண்டு முழுவதுமே சினிமாவை விட அரசியல் களத்தில் எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் காத்துக் கொண்டிருக்கிறது என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சினிமா சூப்பர் ஸ்டார், அரசியல் சூப்பர் ஸ்டார்: சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்துக்கு சென்று சீமான் சந்தித்து வந்த நிலையில், அந்த போட்டோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்க்கு எதிராக சீமான் பேசி வரும் நிலையில், ரஜினிகாந்த் சீமானுக்கு ஆதரவு தருகிறாரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வந்த பின்னர் பேசிய சீமான், சினிமாவில் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார். அதே போல அரசியலில் நான் தான் சூப்பர் ஸ்டார் என பேசியது தற்போது டிரெண்டாகி வருகிறது. அதுதொடர்பாக ஏகப்பட்ட ட்ரோல்களும், மீம்களும் பறந்து வருகின்றன.

எம்ஜிஆர் தான்: சீமானின் பேச்சை தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சினிமா, அரசியல் இரண்டிலும் வென்ற ஒரே சூப்பர் ஸ்டார்." என பதிவிட்டு எம்ஜிஆர் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். சீமானுக்கு சரியான பதிலடி கொடுத்துருக்கீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

vijay seeman blue sattai maran

விஜய் அந்த இடத்தை பிடிப்பார்: ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் விஜய் அந்த இடத்தை கட்டாயம் பிடிப்பார் என்றும் வருங்காலத்தில் இதே போல ஒருவர் விஜய்யின் போட்டோவை போட்டு சினிமா மற்றும் அரசியலில் சாதித்தவர் விஜய் என பதிவிடுவார்கள் என உறுதியாக கூறி வருகின்றனர். வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எந்தளவுக்கு கிடைக்கப் போகிறது என்பதை காணவும் விஜய்யின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்கின்றனர். தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் இன்னும் 6 மாதத்தில் முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தில் சீமான் அப்பா ரோலில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X