ஒரு அளவுக்கு உருட்டுங்கப்பா.. சிம்பு ரசிகர்களை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு

சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் சிம்பு ரசிகர்களை திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

Blue Sattai Maran Trolls Simbu Fans in his twitter page

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.

எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியான வீடியோ: சூழல் இப்படி இருக்க எஸ்டிஆர் 48 படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதன் மூலம் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதனையடுத்து ஒரு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ எஸ்டிஆர் 48 படத்தின் வீடியோதான் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு இருந்த சூழலில்; அது காஸா கிராண்ட் நிறுவனத்துக்கான விளம்பர வீடியோ என்று தெரிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள்.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் சிம்பு ரசிகர்களை திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்திருக்கிறார். அதாவது சிம்பு ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, சிம்புவால் அசுரன் படத்தில் நடிக்க முடியும். ஆனால் தனுஷால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை, Simbu can do அசுரனா? அதான் AAA படத்துல பெரியவர் கெட்டப்ல சத்துன மாதிரியா? ஒரு அளவுக்கு உருட்டுங்கடா என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X