திடீர் தளபதி சிவகார்த்திகேயன்.. ஹீரோக்களை தமிழ் இயக்குநர்கள் காலி செய்றாங்க..ப்ளூ சட்டை மாறன் அதிரடி

சென்னை: ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். அவரது திரை விமர்சனத்தில் நக்கல்களும், நையாண்டிகளும் அவ்வளவு இருக்கும். சில சமயங்களில் அவை ஓவர் டோஸாகவும் சென்று சர்ச்சைகளையும் சந்தித்ததுண்டு. விமர்சனம் மட்டுமின்றி நடிகர்கள் குறித்தும் தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை அவர் வைப்பார். இதனால் பல நடிகர்களின் ரசிகர்களுக்கு அவரை கண்டாலே ஆகாது. இப்படிப்பட்ட நிலைமையில் தமிழ் சினிமா இயக்குநர்களையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அவர்.

திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. அவரது திரை விமர்சனம் அவ்வளவு வெளிப்படையாக இருக்கும். நல்ல படங்களை அவர் கொண்டாடியதற்கும் தவறியதில்லை. அதேசமயம் ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அதனை வைத்து செய்துவிடுவார் அவர். அது சில சமயம் ஓவர் டோஸாகி அவர் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவ்வளவு பேசும் அவர் படம் எடுக்க வேண்டியதுதானே என்று ஒருதரப்பினர் கூறினார்கள்.

ஆண்டி இந்தியன் ப்ளூ சட்டை மாறன்: நிலைமை இப்படி இருக்க ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார் அவர். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். மேலும் பேசுவது எளிது படம் எடுப்பது கஷ்டம் என்பதை இப்போதாவாது ப்ளூ சட்டை புரிந்துகொண்டிருப்பார் என்றும் கூறினார்கள். இதற்கிடையே அவர் உருவ கேலியையும் செய்துவந்தார். அது கண்டனத்தை பெற்றதையடுத்து அந்த மாதிரியான கேலிகளை அவர் நிறுத்திவிடார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blue Sattai Maran Trolls Sivakarthikeyan And Tamil Movie Directors

நடிகர்களை சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன்: திரைப்படங்களை மட்டுமின்றி நடிகர்களையும் விமர்சனம் செய்வது வழக்கம். நடிகர்கள் யாரேனும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட்டாலோ, கருத்துக்களை தெரிவித்தாலோ தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்களை வைத்து செய்துவிடுவார். இதன் காரணமாக நடிகர்களின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு. இருப்பினும் ப்ளூ சட்டை அதை பற்றியெல்லாம் சட்டை செய்வதே இல்லை.

தமிழ் இயக்குநர்களின் பரிதாப நிலைமை: இதற்கிடையே சமீப காலமாக வேற்று மொழி நடிகர்களை தமிழ் இயக்குநர்கள் இயக்குவது அதிகரித்திருக்கிறது. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, லிங்குசாமி என அந்த லிஸ்ட் செல்லும். இவர்களில் அட்லீ மட்டுமே ஷாருக்கானை வைத்து ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை இயக்குகிறார். சமீபத்தில்கூட சல்மானை கானை வைத்து முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் திரைப்படம் தோல்வியடைந்தது. இந்தச் சூழலில் ஒரே ட்வீட்டில் சிவகார்த்திகேயனையும், தமிழ் இயக்குநர்களையும் ஒட்டுமொத்தமாக காலி செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ப்ளூ சட்டை ட்வீட்: அவர் தனது எக்ஸ் தளத்தில், "A.R.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படுதோல்வி அடைந்தது. அடுத்ததாக திடீர் தளபதி நடிக்கும் மதராஸி படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்‌. பிறமொழி ஹீரோக்களை தமிழ் இயக்குனர்கள் சமீபத்தில் காலி செய்த படங்கள்: ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர். இயக்கம்: சங்கர், மம்முட்டி நடித்த டாமினிக். இயக்கம்: கவுதம் வாசுதேவன். ராம் பொத்தினேனி நடித்த தி வாரியர். இயக்கம்: லிங்குசாமி. நாக சைதன்யா நடித்த கஸ்டடி. இயக்கம்: வெங்கட் பிரபு. சிவராஜ் குமார் நடித்த‌ பைரகி. இயக்கம்: விஜய் மில்டன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X