சிவகார்த்திகேயனை தேவையில்லாமல் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் முதல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வரை எனவரிடமும் வாங்கிக் கட்டி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து நெகட்டிவிட்டியை பரப்பி வருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

நடிகர்களை பொதுவெளியில் சினிமாக்காரரே இப்படி ட்ரோல் செய்வதை பலரும் கண்டித்தும் வருகின்றனர். ஆனால், தொடர்ந்து தனது வேலையை ப்ளூ சட்டை மாறன் பார்த்து வருகிறார்.

15 வருடங்களை கடந்த சிவாஜி

15 வருடங்களை கடந்த சிவாஜி

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை ஏவிஎம் நிறுவனம் திடீரென வெகு விமர்சையாக நேற்று கொண்டாடியது. இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்தை தனது மகளுடன் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஷேர் செய்திருந்தார். நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், பிரேம்ஜி என பல சினிமா பிரபலங்களும் சிவாஜி படம் பற்றிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.

15 தடவ சிவாஜி பார்த்தேன்

15 தடவ சிவாஜி பார்த்தேன்

இதில், நடிகர் சிவகார்த்திகேயன், அப்போவே சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் தியேட்டரில் போய் பார்த்தேன் என சிவாஜி படத்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பதை அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். மேலும், டான் படத்தில் வகுப்பறைக்குள் இருந்தபடியே ரஜினிகாந்த் படங்களை பார்க்கும் அளவுக்கு காட்சிகளையும் வைத்திருப்பார்.

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சொல்வது பொய் என்கிற வகையில் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்ரோல் மீம் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் ரஜினிகாந்த் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை போட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடமும் வம்பு சண்டை போட்டு வருகிறார் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆண்டி இண்டியன் பார்க்க முடியல

ஆண்டி இண்டியன் பார்க்க முடியல

ரஜினி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி வருகின்றனர். சிவாஜி படத்துக்கு என்னடா குறை.. இப்போ டிவியில போட்டா கூட பார்க்கலாம்.. உன்னோட ஆண்டி இண்டியன் படத்தை ஒரு வாட்டி கூட பார்க்க முடியல என இந்த ரசிகர் விளாசி தள்ளி உள்ளார்.

ஃபயர் விட்ருப்ப

ஃபயர் விட்ருப்ப

இதுவே ஆண்டி இண்டியன் படத்தை 15 தடவை பார்த்தேன்னு சொன்னா ஃபயர் விட்டுருப்ப என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளும் வழக்கம் போல காது கூசும் கெட்ட வார்த்தைகளுடன் போட்டோ எடிட் கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

Recommended Video

நண்பர்களை சேர்த்துக்கிட்டு பண்ற எந்த வேலையும் வெற்றிதான் | Siva Karthikeyan | Nenjukku Needhi
292 தடவை

292 தடவை

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை சமீபத்தில் ஹாலிவுட் ரசிகர் ராமிரோ அலானிஸ் என்பவர் 292 தடவை தியேட்டரில் பார்த்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். தனக்கு பிடித்த நடிகர்களின் படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும், ரசிகர்கள் பார்க்கலாம். அவர்களே அதை சொல்லும் போது, அது உருட்டு என்றும் பொய் என்றும் சொல்வது உங்களை போல சினிமா விமர்சகர்களுக்கு உகந்தது அல்ல என்றும் நெட்டிசன்கள் அட்வைஸ் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X