அப்பாடா.. மன்சூர், வேர்ல்ட் கப்னு டைவர்ட் ஆகிட்டாங்க.. சிவகார்த்திகேயனை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: மன்சூர் அலி கான் பிரச்சனை, வேர்ல்ட் கப் என டைவர்ட் ஆகிய நிலையில், நாம அப்படியே எஸ்கேப் ஆகிட்டோம் என சிவகார்த்திகேயன் நினைத்துக் கொண்டிருப்பதாக ப்ளூ சட்டை மாறன் மீண்டும் சீண்டியுள்ளார்.

இசையமைப்பாளர் இமான் தனது பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதனை தொடர்ந்து பலரும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Blue Sattai Maran trolls Sivakarthikeyan issue over Mansoor Ali Khan and World Cup row

ஆனால், அந்த சர்ச்சை குறித்து இதுவரை சிவகார்த்திகேயன் எந்தவொரு விளக்கமும் தெரிவிக்காமல் அதை அப்படியே கடந்து வருகிறார்.

மன்சூர் அலி கான் சர்ச்சை: நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலி கானுக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நடிகை த்ரிஷா இந்த விவகாரத்தை கண்டும் காணாதது போல விட்டு விடாமல், வெளிப்படையாக தனது கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அவருக்கு பல சினிமா பிரபலங்களும் நடிகர்களும் ஆதரவு தெரிவித்து மன்சூர் அலி கானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ், சாந்தனு, சின்மயி உள்ளிட்ட பலர் மன்சூர் அலி கானின் மோசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உலக கோப்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா டாஸ் வென்ற நிலையில், இந்தியாவை முதலில் ஆட வைத்துள்ளது. ஒட்டுமொத்த மக்களும் உலக கோப்பையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் பிரச்சனையையும் மறந்துடாதீங்க என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.

விடாத ப்ளூ சட்டை: ”CSK: அப்பாடா..மன்சூர் அலிகான், வேர்ல்ட் கப்னு டைவர்ட் ஆகி.. நம்மளை மறந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கி மீடியா பக்கம் தலைகாட்டாம தலைமறைவாவே இருப்போம்‌.” என ட்வீட் போட்டு வம்பிழுத்துள்ளார். யாரு மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X