இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஏற்பட்ட பிரச்சனையை மறந்து விட்டு அவர்கள் இருவரும் தங்கள் வேலைகளை செய்து வந்தாலும் ப்ளூ சட்டை மாறன் அதையெல்லாம் மறக்க மாட்டேன் என தொடர்ந்து சிவகார்த்திகேயனை டார்கெட் செய்து அடித்து வருகிறார்.
மனம் கொத்தி பறவை படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த டி. இமான் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தார். இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர். திடீரென சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என பெரிய குண்டை இமான் தூக்கிப் போட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராணுவ வீரரின் பயோபிக் படமான அமரன் படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
வெற்றிக் கூட்டணி: மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என தொடர்ந்து சிவகார்த்திகேயன், டி. இமான் காம்போ வெற்றிக் கூட்டணியாக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கும்முற டப்புறப்போட வைத்தது. ஆனால், சமீப காலமாக அந்த கூட்டணி காணாமல் போனது ஏன் என்கிற கேள்விக்கு டி. இமான் அளித்த பேட்டி ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரிய துரோகம்: சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்துக்கு இந்த ஜென்மத்தில் மறக்கவே மாட்டேன் என்றும் அவர் படங்களுக்கு இனிமேல் இசையமைக்க மாட்டேன் என்றும் என் இசையில் தான் அவர் பாடகரே ஆனார். ஆனால், என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். அவர் செய்த துரோகம் என்ன? என்கிற கேள்விக்கு அதை கூற விரும்பவில்லை என இமான் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்து சென்ற சிவகார்த்திகேயன்: அயலான் படத்தின் புரமோஷனுக்காக மீடியாக்களை தொடர்ந்து சந்தித்த சிவகார்த்திகேயன் பெரும்பாலும் இந்த கேள்வியே வராத அளவு பார்த்துக் கொண்டார். மறைமுகமாக சிலர் என்னை வெறுப்பார்கள், என்னை பற்றி தப்பா பேசுவார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதே நல்லது என பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் விடமாட்டார் போல: இன்று காலை சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தி விட்டுச் சென்றார். அதன் புகைப்படத்தை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன், ”இமான் வருவதறகுள் வேகமாக வாக்களித்து விட்டு திரும்பினார் அமரன்” என கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

உருப்படியான வேலை: போய் ஏதாவது உருப்படியான வேலையை பாருடா என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்து வருகின்றனர். தேர்தல் அன்னைக்கு கூட லீவு இல்லையா, பாவம் அவரை விட்டுருங்க என நெட்டிசன்களும் ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். புதிதாக படங்கள் இல்லாத நிலையில் வன்மத்தை கக்க முடியாமல் இருந்த ப்ளூ சட்டை மாறன் இன்னைக்கு கக்கி விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











