Ameer: செல்ஃபோன் சிவகுமார் ஐயா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.. ப்ளூ சட்டை மாறன் கிண்டல்!
சென்னை: Ameer Paruthiveeran issue - அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மோசமான பேச்சு காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர். அமீரை திருடன் என ஞானவேல் ராஜா சொன்னதற்கு பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரகனி, சினேகன், கரு. பழனியப்பன் பருத்தி வீரன் படத்தில் குட்டி சாக்காக நடித்த விமல்ராஜ் உள்பட பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பருத்திவீரன் பஞ்சாயத்தில் நடிகர் சூர்யா குடும்பத்தின் மீது அமீர் வழக்கு தொடர்ந்தது தான் அவர்களிடையே மனக்கசப்பு எழ காரணம் என்றும் கூறுகின்றனர்.
சிவகுமாரை இழுத்து விட்ட கரு. பழனியப்பன்: அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பஞ்சாயத்தை முடித்து வைக்க நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை இந்த பிரச்சனையில் பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவகுமாரையும் கரு. பழனியப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உள்ளே இழுத்து விட்டு பிரச்சனையை பெரிதாக்கி உள்ளார்.
இந்த திருக்குறள் தெரியாதா?: நூறு திருக்குறள் சொல்ற உங்களுக்கு இந்தவொரு திருக்குறள் தெரியாதா எனக் கூறிய கரு. பழனியப்பன், "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" என்கிற திருக்குறளையும் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அப்பாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என சூர்யா மற்றும் கார்த்தி இந்த பிரச்சனையை முடிக்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகுமார் சப்போர்ட்: இந்த விவகாரத்தில் ஞானவேல் ராஜா இவ்வளவு திமிராக பேசக் காரணமே அவருக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி சப்போர்ட் இருக்கிறதா? என்கிற கேள்வியை கரு. பழனியப்பன் அதிரடியாக வைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
செல்ஃபோன் சிவகுமார் மேடைக்கு வரவும்: இந்நிலையில், கரு. பழனியப்பன் கண்டனத்தை மேற்கோள் காட்டிய ப்ளூ சட்டை மாறன், "செல்ஃபோன் சிவகுமார் ஐயா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும். இப்படிக்கு, பருத்திவீரன் சிறப்பு பஞ்சாயத்து குழு, கோடம்பாக்கம் ஆலமரத்தடி." என ட்வீட் போட்டு சிவகுமாரை அசிங்கப்படுத்த ஆரம்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











