Blue Sattai Maran: பாக்ஸ் ஆஃபீஸில் வடை சுடும் வேட்டையன்? ப்ளூ சட்டை மாறனின் பதிவால் ரசிகர்கள் ஷாக்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேட்டையன். கடந்த 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. படம் பார்த்த பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டும் இல்லாமல், படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என பரவலான பாராட்டினைப் பெற்றார். அனிருத்தின் இசையும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினைப் பெற்றுள்ளது. படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடலும் அதன் நடன அசைவுகளும் தியேட்டரையே குலுங்க வைத்தது.

படம் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூலைக் குவித்து வருகின்றது. கடந்த நான்கு தினங்களில் படம் இந்தியாவில் மட்டும் ரூபாய் 115 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் படத்தினை தோல்விப்படம் என இணையத்தில் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. இதற்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்தும் படம் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்தும் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

வசூல் வடை: குறிப்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மய்யமாகக் கொண்டு, " தீபாவளிக்கு வந்த அண்ணாத்த வசூலை கனமழைதான் காலி பண்ணிச்சு. இப்ப இந்த படத்துக்கும் வில்லன் அதே கனமழைதான். இனிமே 300, 400 கோடி வசூல் வடை சுட்டா யாரும் நம்ப மாட்டாங்க. பேசாம கங்குவாவை வர விட்டிருக்கலாம். அவசரப்பட்டு மாட்டிக்கிட்டோம். வேட்டையன் வேணுகோபால்" என பதிவிட்டுள்ளார். இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

கனமழை: ப்ளூ சட்டை மாறன் இது மட்டும் இல்லாமல், 'கனமழை இல்லன்னா.. 600 கோடி வடை சுட்டு industry hit னு சொல்லி ஒப்பேத்தி இருக்கலாம். சரி..பேசாம 250 வரைக்கும் சுட்டுட்டு கடையை மூடிருவோம். அதுக்கு மேல சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க' என பதிவிட்டு, அதனுடன் ஒருவர் கடையில் வடை சுடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் 650 கோடிகளை படம் வசூல் செய்யும் என பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வர, அதனை காலாய்க்கும் விதமாக, 650 என்ற வடை தட்டில் இருப்பதைப்போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாராட்டு: அதேபோல், 'பொதுவா பெரிய ஹீரோக்கள் படத்தில் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்ஸுக்கு மொத்த சம்பளத்தையும் கொடுத்துவிட்டு மிச்சப் பணத்தில் படம் எடுப்பார்கள். ஆனால் கோட் & வேட்டையனுக்கு நல்லா செலவு செய்து படத்தை கிராண்ட் ஆக காட்டியதற்கு ஏ.ஜி.எஸ் & லைக்காவுக்கு நன்றி' எனவும் பதிவிட்டு படக்குழுவினரை பாராட்டவும் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











