Kanguva: தொண்டை கிழிய புரோமோசன் செய்யும் கங்குவா டீம்.. ஃபர்னிச்சரை உடைத்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கங்குவா. இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. படத்தினை இந்தியா முழுவதும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. படத்தினை தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி என பலவேறு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்தாலும் கங்குவா டீம் கடந்த வாரத்தில் இருந்தே புரோமோசன் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பல்வேறு விஷயங்களைப் பேசினர். அவற்றை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துத் தள்ளினார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ப்ளூ சட்டை மாறன் நேற்று மட்டும் இல்லை, கங்குவா டீம் படம் குறித்து எதாவது கூறினால் அதனை உடனே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படக்குழுவினர் கூறியதை பகடி செய்யும் விதமாக, எதாவது கமெண்ட் தெரிவித்து வந்தார். இவர் இவ்வாறு நடந்து கொண்டது, சூர்யா ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்தது. இதனால் ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் பக்கப் பதிவின் கமெண்ட் செக்ஷனில் சூர்யா ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து வசை பாடி வந்தனர். ஆனாலும் ப்ளூ சட்டை மாறன் கங்குவா டீமை கலாய்ப்பதை நிறுத்தவில்லை.

அவ்வப்போது எதாவது பதிவினைப் பகிர்ந்து கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன், நேற்று அதாவது அக்டோபர் 26ஆம் தேதி கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பேசிய விஷயங்களை கலாய்த்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் இல்லாமல் சூர்யா ரசிகர்களையும் கங்குவா படக்குழுவினரையும் எரிச்சலடையச் செய்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன்: குறிப்பாக கங்குவா படம் குறித்தும் நடிகர் சூர்யா குறித்தும் உலப்புகழ் பெற்ற சினிமா கலைஞர்கள் கருத்து தெரிவித்திருந்தால் என்ன கூறியிருப்பார்கள் என ப்ளூ சட்டை மாறன் கற்பனையில் கலாய்த்து பதிவிட்டுள்ளார். அதில், "Inception படத்தில் எனது முதல் சாய்ஸ் சூர்யாதான். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிகார்பியோ நடித்தான் - க்ரிஸ்டோபர் நோலன் " என பதிவிட்டுள்ளார். அதேபோல், "கங்குவா FDFS பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சூர்யா அவர்களை வைத்து ஒரு படம் இயக்குவதுதான் என் வாழ்நாள் கனவு - ஸ்பீல்பெர்க்" எனவும், அதேபோல், " இந்தியாவில் கங்குவா எனும் தமிழ்ப்படம் பற்றி வரும் செய்திகளை கேட்டு அசந்து போகிறேன். அவதாரை விட 100 மடங்கு பிரம்மாண்டமாக உள்ளதாம். அவதார் வசூலை தகர்க்கும் எனவும் சொல்கிறார்கள். அப்படத்தை காண ஆவலுடன் உள்ளேன் - ஜேம்ஸ் கேமரூன்" எனவும் பதிவிட்டு அவர்களின் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

ஞானவேல் ராஜா: இதற்கு முன்னர் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல், கங்குவா படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 2,000 கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கின்றோம். அந்த அளவிற்கு படத்தில் கன்ட்டன்ட் உள்ளது. மேலும் படம் இதுவரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படம் கங்குவா. படம் எவ்வளவு வசூல் செய்தாலும் சரி, அது 500 கோடியோ, 1000 கோடியோ, 2000 கோடியோ எவ்வளவு வசூல் செய்தாலும் அதற்காக நாங்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி ரசீதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்கின்றேன் எனக் கூறியிருந்தார்.

பில்டப்: இயக்குநர் சிவா கூறியதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், 'அளவான ப்ரமோசன் பண்ணிட்டு.. அமைதியா இருந்தா தானாவே படம் ஓடும்' என பதிவிட்டிருந்தார். ரூபாய் 2,000 கோடி வசூல் செய்யும் என ஞானவேல் ராஜாவின் கருத்து குறித்து சூர்யா பேசும்போது, ஆசைபடுவதில் ஒன்றும் தவறில்லையே என கங்குவா புரோமோசனில் பேசியிருந்தார்.



Click it and Unblock the Notifications











