Blue Sattai: 'இப்பதான் கண்ணுல பட்டது'... எதற்கும் துணிந்தவன் வசூல் 200 கோடியா? ப்ளூ சட்டை பங்கம்

சென்னை: சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளது.

கங்குவா படத்துக்கு முன்னதாக சூர்யா நடிப்பில் கடந்தாண்டு எதற்கும் துணிந்தவன் வெளியானது.

இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளது சூர்யா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

 Blue Sattai Maran Trolles as Suryas Etharkkum Thunindhavan Box Office

எதற்கும் துணிந்தவன் வசூல் 200 கோடியா?: சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகியிருந்தது.

இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவுக்கு சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்ட பலர் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை ப்ளூ சட்டை மறன் ட்ரோல் செய்துள்ளது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது கடந்தாண்டு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் சூர்யாவுடன் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூரரைப் போற்று, ஜெய்பீம் என தொடர்ந்து சூர்யாவின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிவந்தன. அதன்பின்னர் திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன், சூர்யா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.

 Blue Sattai Maran Trolles as Suryas Etharkkum Thunindhavan Box Office

அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில், இந்தப் படம் 200 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டிருந்தது. அதனை தற்போது தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை, பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ட்ரோல் செய்துள்ளார். "இப்பதான் கண்ல பட்டது, இதை டிசைன் பண்ணவர்.. எப்படி சிரிக்காம வேலை பாத்தாரோ.." என ட்வீட் செய்துள்ளார்.

அதாவது, எதற்கும் துணிந்தவன் படம் 200 கோடி வசூல் செய்துள்ளது என்பதே காமெடியாக இருப்பதாக பங்கமாக கலாய்த்துள்ளார். இப்படியொரு போஸ்டரை டிசைன் பண்ணவருக்கு இது காமெடியாக இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதேநேரம் இந்த டிவிட்டர் பதிவில் ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X